Tag: சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில் சேவை

தினசரி தேசிய நிகழ்வுகள்

சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில் சேவை சவுராஷ்டிரா - தமிழ் சங்கமத்துக்கான முதல் சிறப்பு ரயில் சேவையை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் தமிழகத்திலிருந்து 288 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.    சௌராஷ்டிரா - தமிழ் சங்கமம் விழா                                                                                                      சௌராஷ்டிரா - தமிழ் சங்கமம் விழா ஏப்.17  முதல் ஏப்.26 வரை 10 நாள்கள் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. 'மிஸ் இந்தியா 2023' 2023ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்  ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பிரமாண்டமான உலக அழகி போட்டியின் 71வது பதிப்பில் நந்தினி குப்தா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலகளாவிய இயக்கம் பிரதமர் மோடி அழைப்பு விவாத மேடைகளில் இருந்து ஒரு கருத்து வீட்டுக்குள் நுழையும்போது மாபெரும் மக்கள் இயக்கமாக அது மாறும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவதில் மக்களின் பங்களிப்பு மற்றும் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சிக்கு அழைப்பு விடுத்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக வங்கி நடத்தும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்றார். சர்வதேச அமைப்புகளின் பங்கு: பருவநிலை மாற்றத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை 26 சதவீதத்திலிருந்து 35-ஆக உயர்த்த உலக வங்கி திட்டமிடுவது வரவேற்கத்தக்கது. பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிக ளுக்கு சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.  'மிஷன் லைஃப் போன்ற, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் திட்டங்களுக்கு உலக வங்கி கூடுதல் நிதியுதவி அளித்தால் அதன் விளைவுகள் பன்மடங்காக இருக்கும்' என்றார்.