தினசரி தேசிய நிகழ்வுகள்

சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்துக்கு சிறப்பு ரயில் சேவை

  • சவுராஷ்டிரா – தமிழ் சங்கமத்துக்கான முதல் சிறப்பு ரயில் சேவையை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.
  • இந்த ரயிலில் தமிழகத்திலிருந்து 288 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.   

சௌராஷ்டிரா – தமிழ் சங்கமம் விழா                                                                                                     

  • சௌராஷ்டிரா – தமிழ் சங்கமம் விழா ஏப்.17  முதல் ஏப்.26 வரை 10 நாள்கள் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.

‘மிஸ் இந்தியா 2023’

  • 2023ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்  ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பிரமாண்டமான உலக அழகி போட்டியின் 71வது பதிப்பில் நந்தினி குப்தா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலகளாவிய இயக்கம் பிரதமர் மோடி அழைப்பு

  • விவாத மேடைகளில் இருந்து ஒரு கருத்து வீட்டுக்குள் நுழையும்போது மாபெரும் மக்கள் இயக்கமாக அது மாறும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவதில் மக்களின் பங்களிப்பு மற்றும் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சிக்கு அழைப்பு விடுத்தார்.
  • பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக வங்கி நடத்தும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்றார்.
  • சர்வதேச அமைப்புகளின் பங்கு: பருவநிலை மாற்றத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை 26 சதவீதத்திலிருந்து 35-ஆக உயர்த்த உலக வங்கி திட்டமிடுவது வரவேற்கத்தக்கது.
  • பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிக ளுக்கு சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.
  •  ‘மிஷன் லைஃப் போன்ற, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் திட்டங்களுக்கு உலக வங்கி கூடுதல் நிதியுதவி அளித்தால் அதன் விளைவுகள் பன்மடங்காக இருக்கும்’ என்றார்.
Next தினசரி தேசிய நிகழ்வு >