Tag: சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 2023– டிசம்பர் 18

வரலாறு

முக்கிய தினங்கள்  சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 2023– டிசம்பர் 18 உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பைப் பிரதிபலிக்கவும் கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. கருத்துரு  2023 : “இன்றே செயல்படுங்கள்” என்பதாகும். இந்திய கடற்படை தினம் 2023 – டிசம்பர் 4 இந்திய கடற்படையின் பங்கு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது 'ஆபரேஷன் டிரைடென்ட்' தொடங்கப்பட்டதையும் இந்த நாள் நினைவுபடுத்துகிறது. ஆபரேஷன் ட்ரைடென்ட்' இன் கீழ் இந்திய கடற்படை கராச்சியை நோக்கி மூன்று ஏவுகணை படகுகளை ஏவியது - INS வீர், INS நிபாட், INS நிர்காட் மற்றும் வித்யுத் மேலும்  மூன்று பாகிஸ்தான் கடற்படை கப்பல்களை மூழ்கடித்தது. கருத்துரு 2023 : “கடல்சார் களத்தில் செயல்பாட்டுத் திறன், தயார்நிலை மற்றும் பணியை நிறைவேற்றுதல்” என்பதாகும். கலாச்சாரம் காசி தமிழ் சங்கமம் 2.0 காசி தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிக்கோள் - பண்டைய இந்தியாவில் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் இரண்டு முக்கிய மையங்களான  காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான  பிணைப்புகளை புதுப்பித்தல். “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக  இது தொடங்கப்பட்டது. காசி தமிழ் சங்கத்தின் முதல் பதிப்பு 2022 இல் நடைபெற்றது. குறிப்பு வாரணாசி-கன்னியாகுமரி இடையே காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.