வரலாறு

முக்கிய தினங்கள் 

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 2023– டிசம்பர் 18

  • உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பைப் பிரதிபலிக்கவும் கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • கருத்துரு  2023 : “இன்றே செயல்படுங்கள்” என்பதாகும்.

இந்திய கடற்படை தினம் 2023 – டிசம்பர் 4

  • இந்திய கடற்படையின் பங்கு மற்றும் சாதனைகளை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ தொடங்கப்பட்டதையும் இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
  • ஆபரேஷன் ட்ரைடென்ட்’ இன் கீழ் இந்திய கடற்படை கராச்சியை நோக்கி மூன்று ஏவுகணை படகுகளை ஏவியது – INS வீர், INS நிபாட், INS நிர்காட் மற்றும் வித்யுத் மேலும்  மூன்று பாகிஸ்தான் கடற்படை கப்பல்களை மூழ்கடித்தது.
  • கருத்துரு 2023 : “கடல்சார் களத்தில் செயல்பாட்டுத் திறன், தயார்நிலை மற்றும் பணியை நிறைவேற்றுதல்” என்பதாகும்.

கலாச்சாரம்

காசி தமிழ் சங்கமம் 2.0

  • காசி தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • குறிக்கோள் – பண்டைய இந்தியாவில் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் இரண்டு முக்கிய மையங்களான  காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான  பிணைப்புகளை புதுப்பித்தல்.
  • “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக  இது தொடங்கப்பட்டது.
  • காசி தமிழ் சங்கத்தின் முதல் பதிப்பு 2022 இல் நடைபெற்றது.

குறிப்பு

  • வாரணாசி-கன்னியாகுமரி இடையே காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Next Current Affairs வரலாறு >