கே-4 ஏவுகணை சோதனை பின்னணி: இந்தியா ஐஎன்எஸ் அரிஹாட் கப்பலில் இருந்து கே-4 என்ற இடைநிலைத் தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதித்தது. முக்கியத்துவம்: இந்தியாவின் கடல்சார் அணுசக்தி தடுப்புச் சக்தியைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல். கே-4 ஏவுகணை அம்சங்கள்: இது திட எரிபொருள் கொண்ட கே-4 பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது . 2 டன் வரை அணு ஆயுதப் போர்க்கருவியை சுமந்து செல்ல முடியும். ஐஎன்எஸ் அரிஹாட் நீர்மூழ்கிக் கப்பல்: ஐஎன்எஸ் அரிஹாட், இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி மூலம் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் (SSBN). எடை: 6,000 டன்கள். இதற்கு முந்தையது: ஐஎன்எஸ் அரிஹந்த் (2018-ல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தது). இது 750 கி.மீ. தூரம் செல்லக்கூடிய K-15 ஏவுகணைகளை மட்டுமே கொண்டது.

