விண்வெளி இஸ்ரோவின் வர்த்தக சாதனை: 1993 முதல் இதுவரை 34 நாடுகளின் 434 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. எல்விஎம்-3 ராக்கெட் திறன்: அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன ராக்கெட் புவி தாழ்வட்டப் பாதையில் 8,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், ஒத்திசைவுப் பாதை யில் 4,000-க்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த முடியும். எல்விஎம்-3 முக்கிய பயணங்கள்: 2017 ஜிசாட்-19 (முதல் வெற்றி) 2019 சந்திரயான்-2 (3,850 கிலோ) 2022 அக்டோபர் ஒன்வெப் 36 செயற்கைக்கோள்கள் 2023 மார்ச் ஒன்வெப் 36 செயற்கைக்கோள்கள் 2023 சந்திரயான்-3 நவம்பர் 2024 சிஎம்எஸ்-3 (4,400 கிலோ) டிசம்பர் 2025 ப்ளூபேர்ட்-6 (6,100 கிலோ) ராக்கெட் தயாரிப்பு பயணம் தொடக்கம்: 1980 ஆம் ஆண்டு 35 கிலோ எடை கொண்ட ரோகிணி (RS-1) சோதனை செயற்கைக்கோள் SLV-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியது. பரிணாம வளர்ச்சி: ககன்யான் திட்டம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டமாகும். LVM-3 ராக்கெட் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் புவியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பின்னர், மீண்டும் அதே விண்கலம் மூலம் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவார்கள். வியோமித்ரா மிஷன்: ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்னர், 'வியோமித்ரா' என்ற பெண் தோற்றம் கொண்ட ரோபோவை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகியுள்ளது. வியோமித்ரா சோதனை வெற்றியடைந்தால், அடுத்தகட்டமாக ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அதன்மூலம் தங்கள் சொந்த நாட்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்கா, ரஷியா, சீனாவின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும். பாரதிய அந்தரீக்ஷ நிலையம் 2035 எதிர்காலத்தில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. பாரதிய அந்தரீக்ஷ நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் திட்டத்துக்கான கனவுகளைச் சுமக்கத் தயாராகி வருகிறது எல்விஎம்-3.

