அறிவியல்

விண்வெளி 

இஸ்ரோவின் வர்த்தக சாதனை:

  • 1993 முதல் இதுவரை 34 நாடுகளின் 434 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
  • நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

எல்விஎம்-3 ராக்கெட் திறன்:

  • அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன ராக்கெட்
  • புவி தாழ்வட்டப் பாதையில் 8,000 கிலோ எடை  கொண்ட செயற்கைக்கோள்களையும், ஒத்திசைவுப் பாதை யில் 4,000-க்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த முடியும்.

எல்விஎம்-3 முக்கிய பயணங்கள்:

2017 ஜிசாட்-19 (முதல் வெற்றி)
2019 சந்திரயான்-2 (3,850 கிலோ)
2022 அக்டோபர் ஒன்வெப் 36 செயற்கைக்கோள்கள்
2023 மார்ச் ஒன்வெப் 36 செயற்கைக்கோள்கள்
2023 சந்திரயான்-3
நவம்பர் 2024 சிஎம்எஸ்-3 (4,400 கிலோ)
டிசம்பர் 2025 ப்ளூபேர்ட்-6 (6,100 கிலோ)

 

ராக்கெட் தயாரிப்பு பயணம் தொடக்கம்:

  • 1980 ஆம் ஆண்டு 35 கிலோ எடை கொண்ட ரோகிணி (RS-1) சோதனை செயற்கைக்கோள் SLV-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியது.

பரிணாம வளர்ச்சி: 

ககன்யான் திட்டம்:

  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின்  திட்டமாகும்.
  • LVM-3 ராக்கெட் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்வெளி வீரர்கள் புவியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.
  • பின்னர், மீண்டும் அதே விண்கலம் மூலம் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவார்கள். 

வியோமித்ரா மிஷன்:

  • ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்னர், ‘வியோமித்ரா’ என்ற பெண் தோற்றம் கொண்ட ரோபோவை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகியுள்ளது. 
  • வியோமித்ரா சோதனை வெற்றியடைந்தால், அடுத்தகட்டமாக ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். 
  • அதன்மூலம் தங்கள் சொந்த நாட்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்கா, ரஷியா, சீனாவின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும்.

பாரதிய அந்தரீக்ஷ நிலையம் 2035

  • எதிர்காலத்தில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கவும்  இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. பாரதிய அந்தரீக்ஷ நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் திட்டத்துக்கான கனவுகளைச் சுமக்கத் தயாராகி  வருகிறது எல்விஎம்-3.
Next Current Affairs அறிவியல் >