Tag: இயற்கை பேரழிவு – பாதுகாப்பு நடவடிக்கைகள்

புவியியல்

இயற்கை பேரழிவு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குஜராத்தில் மேக வெடிப்பு குஜராத் மாநிலத்தின் தெற்கு மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து கனமழை பெய்தது. ஹிமாசல பிரதேச மாநிலத்திலும் மேகவெடிப்பைத் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மேக வெடிப்பு பற்றி மேக வெடிப்பு என்பது புவி-நீரியல் அபாயம் என வரையறுக்கப்படுகிறது. மேக வெடிப்புகள் திடீர் மற்றும் எதிர்பாராத மிக கனமழை ஆகும். 20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்திற்கு 100 மிமீ அல்லது 10 செமீ மழைப்பொழிவானது இந்த வகைக்குள் அடங்கும். காரணங்கள் இது முக்கியமாக மலைப்பகுதிகளில் சூடான காற்று நீரோட்டங்கள் தரையில் இருந்து மேகங்களை நோக்கி உயரும் போது நிகழ்கிறது. ஏற்கனவே உருவான மழைத்துளிகளையும் தன்னுடன் சுமந்து செல்கிறது. இதனால், மழைப்பொழிவு சீராக நிகழ்வதில்லை. மேலும் மேகங்கள் அதிகப்படியாக சுருங்கி பெரிய அளவில் உருவாகின்றன. இதனால் உயரமான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் மேகவடிவில் தேங்கியுள்ளது. மேல்நோக்கி செல்லும் நீரோட்டம் வலுவிழந்து மேகங்கள் மழையாக ஒரே நீட்டிப்பில் விழுகின்றன. பொதுவாக, மேக வெடிப்புகள் கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் ஏற்படும். இவ்வகை கனமழைக்கு திரள் மேகங்களே காரணம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியப் பிரதமர் தலைமையில் உள்ளது செப்டம்பர் 27, 2006 இல் நிறுவப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் அடிப்படையில் அமைக்கப்பட்டது

புவியியல்

இயற்கை பேரழிவு – பாதுகாப்பு நடவடிக்கைகள் இயற்கை பேரிடர் பாதிப்புகளைக் களைய நவீன செயல்திறன் இயற்கை பேரிடர்களைக் கையாளும்போது எதிர்வினையைவிட செயலுக்கு முக்கியத்துவம் அளித்து வருங்கால தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதிப்பைக் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புது தில்லியில், தேசிய அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு கருத்தரங்கின் 3-ஆவது அமர்வை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பேரிடர் மீட்புப் பணிகளில் சிறந்து பணியாற்றிய வீரர்களுக்கு “சுபாஷ் சந்திர போஸ் ஆப் த பிரபந்தன்“  விருதுகளை வழங்கி கௌரவித்தார். நாட்டில் முதல் முறையாக 2001 – ஆம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு பிறகு குஜராத்தில்தான் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது.  பின்னர், குஜராத்தின் சட்டத்தை  அடிப்படையாகக் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் கடந்த 2005 – ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், அமைக்கப்பட்டது. பேரிடர் பாதிப்புகளைச் சிறப்பாக கையாள வருங்கால தொழில்நுட்பத்தை மையப்படுத்தி நகரங்களின் உள்கட்டமைப்பைத் திட்டமிட வேண்டும். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண முடியாது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கை வகிக்கவுள்ளன.  அத்துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.  சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகிக்கும். 2030 – ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி வேகமாகப் பயணம் மேற்கொண்டு வருகிறது.  கடந்த 2018 – 2021 காலகட்டத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தியை 31 டெரா வாட் அளவுக்கு இந்தியா அதிகரித்துள்ளது.