Tag: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

புவியியல்

இயற்கை பேரழிவு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குஜராத்தில் மேக வெடிப்பு குஜராத் மாநிலத்தின் தெற்கு மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து கனமழை பெய்தது. ஹிமாசல பிரதேச மாநிலத்திலும் மேகவெடிப்பைத் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மேக வெடிப்பு பற்றி மேக வெடிப்பு என்பது புவி-நீரியல் அபாயம் என வரையறுக்கப்படுகிறது. மேக வெடிப்புகள் திடீர் மற்றும் எதிர்பாராத மிக கனமழை ஆகும். 20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்திற்கு 100 மிமீ அல்லது 10 செமீ மழைப்பொழிவானது இந்த வகைக்குள் அடங்கும். காரணங்கள் இது முக்கியமாக மலைப்பகுதிகளில் சூடான காற்று நீரோட்டங்கள் தரையில் இருந்து மேகங்களை நோக்கி உயரும் போது நிகழ்கிறது. ஏற்கனவே உருவான மழைத்துளிகளையும் தன்னுடன் சுமந்து செல்கிறது. இதனால், மழைப்பொழிவு சீராக நிகழ்வதில்லை. மேலும் மேகங்கள் அதிகப்படியாக சுருங்கி பெரிய அளவில் உருவாகின்றன. இதனால் உயரமான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் மேகவடிவில் தேங்கியுள்ளது. மேல்நோக்கி செல்லும் நீரோட்டம் வலுவிழந்து மேகங்கள் மழையாக ஒரே நீட்டிப்பில் விழுகின்றன. பொதுவாக, மேக வெடிப்புகள் கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் ஏற்படும். இவ்வகை கனமழைக்கு திரள் மேகங்களே காரணம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியப் பிரதமர் தலைமையில் உள்ளது செப்டம்பர் 27, 2006 இல் நிறுவப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் அடிப்படையில் அமைக்கப்பட்டது