Tag: இந்தியாவின் தற்போதை பொருளாதார போக்குகள்

பொருளாதாரம்

இந்தியாவின் தற்போதை பொருளாதார போக்குகள் வலுவான இந்தியப் பொருளாதாரம்  உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியை கண்டுள்ளதுடன், வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் (எஃப்எஸ்ஆர்) அவர் கூறியிருப்பதாவது, பொருளாதார ரீதியிலான பிளவுகளால், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இத்தகைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் நிலையானதாகவும், மீளும் தன்மையுடனும் உள்ளது. இது வங்கி கடனளிப்பு வளர்ச்சி, குறைந்த அளவிலான செயல்படாத சொத்துகள், போதுமான மூலதனம் மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. தொழில் நுட்பம் மற்றும் எண்மமயமாக்கலின் உதவியுடன் வலுப்பெற்றுள்ள நிதி பரிமாற்றங்கள், வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.