பொருளாதாரம்

இந்தியாவின் தற்போதை பொருளாதார போக்குகள்

வலுவான இந்தியப் பொருளாதாரம் 

  • உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியை கண்டுள்ளதுடன், வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
  • ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் (எஃப்எஸ்ஆர்) அவர் கூறியிருப்பதாவது,
    • பொருளாதார ரீதியிலான பிளவுகளால், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
    • இத்தகைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் நிலையானதாகவும், மீளும் தன்மையுடனும் உள்ளது.
    • இது வங்கி கடனளிப்பு வளர்ச்சி, குறைந்த அளவிலான செயல்படாத சொத்துகள், போதுமான மூலதனம் மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது.
  • தொழில் நுட்பம் மற்றும் எண்மமயமாக்கலின் உதவியுடன் வலுப்பெற்றுள்ள நிதி பரிமாற்றங்கள், வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Next பொருளாதாரம் >