புதிய பொருளாதாரக் கொள்கைகள்
டாலர் அற்ற பொருளாதாரம்
- பங்களாதேஷ் மற்றும் இந்தியா வர்த்தக பரிவர்த்தனையை ரூபாயில் தொடங்கின. இது டாலர் மதிப்பை நீக்குவதற்கான ஒரு படியாகும்.
- டாலர் அற்ற பொருளாதாரம் (De-Dollarization) என்பது அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைத்து, வர்த்தகம் மற்றும் பொருளாதார இருப்புக்களை தங்கள் சொந்த நாணயம் அல்லது மாற்று வளங்களில் முன்னேற்றுவதைக் குறிக்கிறது.
- இது பிராந்திய நாணயம் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும்.
- மேலும், இரு நாடுகளும் படிப்படியாக வங்காளதேச நாணயமான ”டாக்கா”வை வர்த்தகத்திற்காக ஏற்றுக்கொள்ளும்.
- சந்தை தேவை மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள வங்கிகளுக்கு ஏற்ப மாற்று விகிதம் நிர்ணயிக்கப்படும்.
ரூபாயின் சர்வதேசமயமாக்கல் பற்றி
- இது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் உள்ளுர் நாணயத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும்.
- இது உலகளாவிய சந்தைகளில் நாணயத்தின் ஏற்றுக்கொள்ளல், பணப்புழக்கம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதை உள்ளடக்கியது.
ரூபாயில் சர்வதேச வர்த்தக தீர்வை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
- ஜுலை 2022 இல் ரிசர்வ் வங்கி, விலைப்பட்டியல், பணம் செலுத்துதல் மற்றும் ஏற்றுமதி/ இறக்குமதிகளுக்கு ரூபாய் பயன்படுத்த கூடுதல் ஏற்பாட்டை வழங்கியது.
- இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, 2022 டிசம்பரில், இந்தியா தனது முதல் வெளிநாட்டு ரூபாய் வர்த்தகத்தை ரஷ்யாவுடன் கண்டது.
- இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 19 நாடுகளில் உள்ள வங்கிகள் ரூபாய் மதிப்பில் செட்டில்மென்ட் செய்ய அனுமதிக்கப்பட்டன.
ரூபாய் சர்வதேசமயமாக்கலின் நன்மைகள்
- இந்திய வணிகங்களுக்கான நாணய அபாயத்தைக் குறைக்கிறது.
- அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருப்பதற்கான தேவையை குறைக்கிறது.
- வெளிநாட்டு நாணயத்தை சார்ந்திருப்பதை குறைக்கிறது.