60-ஆவது ஞானபீடம் விருது
- பின்னணி: 2025 ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீடம் விருது தமிழ்க் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து அவர்களே கவிதைக்காக இவ்விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் ஆவார்.
கவிஞர் வைரமுத்து பற்றி
- இவர் தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் ஆவார் .
- இவர் 13 ஜூலை 1953 ஆண்டு, தேனி மாவட்டம் அருகிலுள்ள மெட்டூரில் பிறந்தார்.
- 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
- முக்கிய நூல்கள்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- கருவாச்சி காவியம்
- தண்ணீர் தேசம்
- மூன்றாம் உலகப்போர்
இவர் பெற்ற விருதுகள்
- பத்மஸ்ரீ – 2003
- பத்மபூஷண் – 2014
- தேசிய விருது – சிறந்த பாடலாசிரியருக்காக 7 முறை
- தமிழ்நாடு அரசு விருதை 6 முறை
- சாகித்திய அகாடமி விருது – 2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
- தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
- 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீடம் விருது பெறும் தமிழ் எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
- நடப்பு தகவல்கள்
- இந்திய உச்ச நீதிமன்றம் 2026 ஆம் ஆண்டு ஹரிஷ் ராணா எதிர் இந்திய யூனியன் (2026) வழக்கில் ஹரிஷ் ராணாக்கு கருணைக்கொலை அனுமதி வழங்கி, அரசியலமைப்பு சரத்து 21-ன் கீழ் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தியது.
ஞானபீடம் விருது பற்றி- இந்த விருது 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இந்திய மொழிகளின் இலக்கியத்தில் சிறந்து விளங்கிய எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
- இந்திய அரசியலமைப்பின் 8-ஆம் அட்டவணையில் உள்ள மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் படைப்புகளை எழுதியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- இந்த விருதில் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் சரஸ்வதி (வாக்தேவி) வெண்கலச் சிலை வழங்கப்படுகிறது.
- இந்த விருது பாரதிய ஞானபீடம் என்ற கலாச்சார அமைப்பால் வழங்கப்படுகிறது.
- இந்த விருதை முதலில் ஜி. சங்கரகுருப் 1965 ஆம் ஆண்டு “ஓடக்குழல்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றார்.
முன்னர் ஞானபீடம் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
- எழுத்தாளர் அகிலன் “சித்திரப் பாவை” நாவலுக்கால 1975-ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருதைப் பெற்றார்
- ஜெயகாந்தன் 2002 ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருதைப் பெற்றார்.
பிசிசிஐ நமன் விருதுகள் 2026 (BCCI Naman Awards 2026)-
- ரோஜர் பின்னி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட்டிற்கு அவர்கள் ஆற்றிய மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி, பிசிசிஐ-யின் உயரிய விருதான கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
- இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், அதன் அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்பிற்காக மிதாலி ராஜூக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
- பாலி உம்ரிகர் விருது – சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆண்கள் பிரிவில் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது
- சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது
- இந்திய உச்ச நீதிமன்றம் 2026 ஆம் ஆண்டு ஹரிஷ் ராணா எதிர் இந்திய யூனியன் (2026) வழக்கில் ஹரிஷ் ராணாக்கு கருணைக்கொலை அனுமதி வழங்கி, அரசியலமைப்பு சரத்து 21-ன் கீழ் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தியது.

