தேசிய நிகழ்வுகள்

ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI)

  • சூழல்: ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), 2016-இல் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது 10 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது.
  • இந்தக் கட்டமைப்பு மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது; இதில் பங்கேற்கும் வங்கிகளின் எண்ணிக்கை 216-லிருந்து (2021) 691-ஆக (2026) உயர்ந்துள்ளது.
  • டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கான அணுகலை இது குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளது.
  • நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் மலிவான மற்றும் எளிமையான பணப்பரிமாற்ற வசதிகளை வழங்குகிறது.
  • ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரிஷியஸ், கத்தார் உட்பட எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது UPI சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.

UPI பற்றி

  • இது  மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும் நிகழ்நேர பணப்பரிமாற்ற தளமாகும்.
  • பரிவர்த்தனைகளின் போது பாரம்பரிய வங்கி விவரங்களின் தேவையை இது நீக்குகிறது.
  • இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) நிர்வகிக்கப்படுகிறது.
  • ஒரே ஒரு UPI ID அல்லது இடைமுகம் மூலம் பல்வேறு வங்கிகள் மற்றும் செயலிகளுக்கு இடையே பணத்தை அனுப்பவும் பெறவும் பயனர்களை அனுமதிக்கிறது.
  • பல்வேறு தளங்களுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.

முக்கிய செயல்பாட்டு அம்சங்கள்

    • உடனடி நிதி பரிமாற்ற வசதி.
  • 24×7 நேரமும் செயல்படக்கூடியது.
  • QR குறியீடு அடிப்படையிலான கட்டண முறைகள்.
  • நபர்களுக்கு இடையிலான (P2P) மற்றும் நபர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான (P2M) பரிவர்த்தனைகளை ஆதரிக்கிறது.

பாதுகாப்பு வழிமுறை

  • சரிபார்ப்பிற்காக இரு-காரணி அங்கீகாரத்தை (Two-factor authentication) பயன்படுத்துகிறது.
  • பாதுகாப்பான மற்றும் நம்பகமான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்காக பாதுகாப்பான டிஜிட்டல் நெறிமுறைகளின் (Protocols) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

தெற்கு ரயில்வே – 75-வது நிறுவன தினம்

  • பின்னணி : இந்திய ரயில்வேயின் மிகப் பழமையான மண்டலங்களில் ஒன்றான தெற்கு ரயில்வே ஏப்ரல் 14  இன்று  75-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது. 
  • 1951 ஏப்ரல் 14 அன்று, மெட்ராஸ் & தென் மராட்டிய ரயில்வே, தென்னிந்திய ரயில்வே மற்றும் மைசூர் மாநில ரயில்வே ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தெற்கு ரயில்வே உருவாக்கப்பட்டது. 
  • தென்னிந்தியாவில் ரயில்வே வரலாறு 1856-ல் ராயபுரம் முதல் ஆற்காடு (வாலாஜா ரோடு) வரை இயக்கப்பட்ட முதல் ரயிலுடன் தொடங்கியது. 
  • 1860-களில் மேற்கு கடற்கரை, 1870-களில் மும்பை மற்றும் 1900-களில் ஹவுரா இணைப்புகள் மூலம் ரயில்வே தேசிய அளவில் விரிவடைந்தது. 
  • 1899-ல் நீலகிரி மலை ரயில் மற்றும் 1925-ல் பாம்பன் பாலம் போன்றவை தெற்கு ரயில்வேயின் முக்கிய சாதனைகளாகும். 
  • தெற்கு ரயில்வே தனது பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு, நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உலகத் தர வசதிகளை வழங்க உறுதியாக உள்ளது. 

 

தெற்கு ரயில்வே பற்றி 

  • தெற்கு ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பு, இந்தியாவின் தென் தீபகற்பத்தின் ஒரு பெரிய பகுதியில் பரவியுள்ளது. 
  • இது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களையும், ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு சிறிய பகுதியையும் உள்ளடக்கியுள்ளது
  • மங்களூர் (மேற்கு கடற்கரை) முதல் கன்னியாகுமரி (தெற்கு) வரை மற்றும் ரேணிகுண்டா (வடமேற்கு) முதல் கூடூர் (வடகிழக்கு) வரை பரவியுள்ளது. 
  • தெற்கு ரயில்வே தலைமையகம் சென்னை நகரில் அமைந்துள்ளது. 
  • தெற்கு ரயில்வேயில் மொத்தம் 6 கோட்டங்கள் உள்ளன: 
  • சென்னை 
  • திருச்சிராப்பள்ளி 
  • மதுரை 
  • பாலக்காடு 
  • திருவனந்தபுரம் 
  • சேலம்

 இந்திய இரயில்வே பற்றி

  • இந்தியாவில் 1853-ஆம் ஆண்டு, டல்கௌசி பிரபு தலைமை ஆளுநராக இருந்த காலத்தில், பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இரயில் போக்குவரத்து முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இரயில்வே உள்கட்டமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் 4-வது இடத்தில் உள்ளது.
  • இந்திய இரயில்வே 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • UNESCO உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் இந்திய இரயில்வேயின் நான்கு இடங்கள் இடம்பெற்றுள்ளன: 
  • டார்ஜிலிங் இமயமலை இரயில்வே (1999)
  •  சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (2004)
  • நீலகிரி மலை இரயில்வே (2005) 
  • கல்கா சிம்லா இரயில்வே (2008) ஆகும்.
Next தேசிய நிகழ்வுகள் >