நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம்
- பின்னணி : நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் அது 2.74% ஆக இருந்தது.
- இந்த தகவலை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
- உணவுப் பணவீக்கம் ஜனவரியில் 2.13% இருந்தது.பிப்ரவரியில் 3.47% ஆக உயர்ந்துள்ளது.
- கிராமப்புறங்களில் பணவீக்கம் 3.37% ஆகவும், நகர்ப்புறங்களில் 3.02% ஆகவும் பதிவாகியுள்ளது.
சில்லறை பணவீக்கம் பற்றி
- சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் அன்றாடப் பயன்பாட்டிற்காக கடைகளில் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் (உணவு, உடை, வீட்டுவசதி, எரிபொருள்) விலை உயர்வைக் குறிக்கிறது.
- இது நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) மூலம் அளவிடப்படுகிறது.
| தேசிய நிகழ்வுகள் |

