நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் பின்னணி : நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் அது 2.74% ஆக இருந்தது. இந்த தகவலை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. உணவுப் பணவீக்கம் ஜனவரியில் 2.13% இருந்தது.பிப்ரவரியில் 3.47% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் பணவீக்கம் 3.37% ஆகவும், நகர்ப்புறங்களில் 3.02% ஆகவும் பதிவாகியுள்ளது. சில்லறை பணவீக்கம் பற்றி சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் அன்றாடப் பயன்பாட்டிற்காக கடைகளில் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் (உணவு, உடை, வீட்டுவசதி, எரிபொருள்) விலை உயர்வைக் குறிக்கிறது. இது நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) மூலம் அளவிடப்படுகிறது. தேசிய நிகழ்வுகள்

