Tag: தமிழக உயிர்வாழ்வு விகிதம் மேம்பட்டுள்ளது

தமிழ்நாடு விவகாரங்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது  சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் 16.11.25 அன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என சுழற்சி முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது. வெயில் மழை, வெள்ளம் எனப் பேரிடர் காலங்களில் தூய்மைப் பணியாளர்களின் ஒப்பற்ற உழைப்பை போற்றும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 2006-இல் தூய்மைப் பணியாளர் நலவாரியம் அமைத்தல், தாட்கோ மூலம் தொழில்முனைவோர் கடன் வழங்குதல் மருத்துவக் காப்பீடு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் வரும் டிச. 6-ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் விரிவாக்கப்படும்' என முதல்வர் தெரிவித்துள்ளார்.   பழங்குடியினர் நலத்துறை பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக உரிய திட்டங்கள் தீட்டுவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் பழங்குடியினர் நல இயக்ககம் உருவாக்கப்பட்டு, 01.04.2018 முதல் நிதி மற்றும் நிர்வாக முழு அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில் பழங்குடியின மக்கள்  1.17 விழுக்காடு உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பழங்குடியினர் வாழும் 10 ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளைக் கொண்ட சேலம் (ஏற்காடு, பச்சமலை, அருநூத்துமலை மற்றும் கல்வராயன் மலை), நாமக்கல் (கொல்லிமலை), கள்ளக்குறிச்சி (கல்வராயன் மலை), திருவண்ணாமலை (ஜவ்வாதுமலை), திருச்சிராப்பள்ளி (பச்சமலை), தர்மபுரி (சித்தேரி மலை) மற்றும் திருப்பத்தூர் ஜவ்வாது மற்றும் ஏலகிரிமலை) ஆகிய 7 மாவட்டங்களில் பழங்குடியினர் திட்ட அலுவலகங்கள் துவக்கப்பட்டு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளுதல் மற்றும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மூலம் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்துவதும், அவர்களின் மொழியினையும் பண்பாட்டினையும் பாதுகாத்தல் அரசின் முக்கிய குறிக்கோளாக கொண்டு இத்துறை செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 37 வகையான பழங்குடியினர் காணப்படுகின்றனர். இவர்களில் தோடா, கோத்தா, குரும்பாஸ், இருளர், பனியன் மற்றும் 41காட்டுநாயகன் ஆகிய 6 பழங்குடியினர் வகுப்பினர் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினராக (PVTGs) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 1976-77-ஆண்டு முதல் பழங்குடியினர் துணைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  மாநில அரசின் ஆண்டு செயல் திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் ஒரு விழுக்காடு பழங்குடியினரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. பழங்குடியினர் ஆய்வு மையம் பழங்குடியினர் பற்றிய விவரங்களை சேகரிக்கவும், பழங்குடியினர் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி, சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை முதலியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காகவும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் 1983 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், முத்தோரை பாலாடா எனும் இடத்தில் "பழங்குடியினர் ஆய்வு மையம்" அமைக்கப்பட்டது.  இம்மையம் மானுடவியல் நிபுணத்துவம்…