தமிழ்நாடு விவகாரங்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்

  • நாட்டிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது 
  • சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் 16.11.25 அன்று தொடங்கி வைத்தார்.
  • இதற்கான நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
  • இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என சுழற்சி முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
  • வெயில் மழை, வெள்ளம் எனப் பேரிடர் காலங்களில் தூய்மைப் பணியாளர்களின் ஒப்பற்ற உழைப்பை போற்றும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
  • தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 2006-இல் தூய்மைப் பணியாளர் நலவாரியம் அமைத்தல், தாட்கோ மூலம் தொழில்முனைவோர் கடன் வழங்குதல் மருத்துவக் காப்பீடு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் வரும் டிச. 6-ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் விரிவாக்கப்படும்’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

பழங்குடியினர் நலத்துறை

  • பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக உரிய திட்டங்கள் தீட்டுவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் பழங்குடியினர் நல இயக்ககம் உருவாக்கப்பட்டு, 01.04.2018 முதல் நிதி மற்றும் நிர்வாக முழு அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
  • மொத்த மக்கள் தொகையில் பழங்குடியின மக்கள்  1.17 விழுக்காடு உள்ளனர்.
  • மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பழங்குடியினர் வாழும் 10 ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளைக் கொண்ட சேலம் (ஏற்காடு, பச்சமலை, அருநூத்துமலை மற்றும் கல்வராயன் மலை), நாமக்கல் (கொல்லிமலை), கள்ளக்குறிச்சி (கல்வராயன் மலை), திருவண்ணாமலை (ஜவ்வாதுமலை), திருச்சிராப்பள்ளி (பச்சமலை), தர்மபுரி (சித்தேரி மலை) மற்றும் திருப்பத்தூர் ஜவ்வாது மற்றும் ஏலகிரிமலை) ஆகிய 7 மாவட்டங்களில் பழங்குடியினர் திட்ட அலுவலகங்கள் துவக்கப்பட்டு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • பழங்குடியின மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளுதல் மற்றும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மூலம் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்துவதும், அவர்களின் மொழியினையும் பண்பாட்டினையும் பாதுகாத்தல் அரசின் முக்கிய குறிக்கோளாக கொண்டு இத்துறை செயல்படுகிறது.
  • தமிழ்நாட்டில் 37 வகையான பழங்குடியினர் காணப்படுகின்றனர்.
  • இவர்களில் தோடா, கோத்தா, குரும்பாஸ், இருளர், பனியன் மற்றும் 41காட்டுநாயகன் ஆகிய 6 பழங்குடியினர் வகுப்பினர் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினராக (PVTGs) வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • 1976-77-ஆண்டு முதல் பழங்குடியினர் துணைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 
  • மாநில அரசின் ஆண்டு செயல் திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் ஒரு விழுக்காடு பழங்குடியினரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.

பழங்குடியினர் ஆய்வு மையம்

  • பழங்குடியினர் பற்றிய விவரங்களை சேகரிக்கவும், பழங்குடியினர் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி, சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை முதலியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காகவும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் 1983 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், முத்தோரை பாலாடா எனும் இடத்தில் “பழங்குடியினர் ஆய்வு மையம்” அமைக்கப்பட்டது. 
  • இம்மையம் மானுடவியல் நிபுணத்துவம் வாய்ந்த இயக்குநர் ஒருவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 

 

‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்

  • தமிழக முதல்வரால் பொதுமக்கள் துணிப்பைகள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காகவும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை டிசம்பர் 24 சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் தொடக்கி வைத்தார்.
  • ‘மஞ்சள்’ துணிப்பை அல்லது தமிழில் அழைக்கப்படும் ‘மஞ்சப்பை’ பயன்படுத்துவது குறித்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தப் பையைப் பயன்படுத்துவதற்கும், பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்துவதற்கும் மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின்’

  • நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இது வரை 8.21 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஆக. 2-ஆம் தேதி 2025 ல் முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை முலம் செயல்படுத்தபடுகிறது.
  • பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதய நலம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல், தோல் நலம், காது-மூக்கு-தொண்டை மகப்பேறு, இயன்முறை சிகிச்சை, பல் மருத்துவம், மன நலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகிய துறைகளின் கீழ் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பரிசோதனைகளும், சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன

 

தமிழக உயிர்வாழ்வு விகிதம் மேம்பட்டுள்ளது

  • குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைக்கான சிறப்பு மையங்களை அமைப்பதன் மூலம், தமிழ்நாடு சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதங்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. 
  • மாநிலத்தின் குழந்தைகளுக்கான மறுமலர்ச்சி மற்றும் அவசர மருத்துவம் (PREM) முயற்சி, அரசு இரண்டாம் நிலை பராமரிப்பு நிறுவனங்கள், மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் அர்ப்பணிப்பு நெறிமுறைகள் மற்றும் பொருத்தமான உள்கட்டமைப்பு மூலம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சையை வலுப்படுத்தியுள்ளது.
  • தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் PREM (குழந்தை மறுமலர்ச்சி மற்றும் அவசர மருத்துவம்) முயற்சி, நெறிமுறைகள், தேவையான உள்கட்டமைப்பு, உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை வைப்பதன் மூலம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சையை வலுப்படுத்தப்பட்டுள்ளது
  • குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதங்கள் 2021 இல் 93.44% இலிருந்து நிலையான உயர்வைக் காட்டுகின்றன தரவு 2024 ஆம் ஆண்டில் 96.26%. நடப்பு ஆண்டில் (ஆகஸ்ட் 2025 வரை), உயிர்வாழும் விகிதம் 94.34%.பி.ஆர்.இ.எம் திறன் ஆய்வகம், ஐ.சி.எச், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி பிராந்திய கூட்டு மையம். ‘வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன’

 

நீலம் கலாச்சார மையம் – அறிஞரை கௌரவிக்கிறது.

  • ஆராய்ச்சியாளரும் அறிஞருமான வி. கீதா, சென்னையிலுள்ள நீலம் கலாச்சார மையத்தால் வழங்கப்படும் ‘அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருதை பெற்றுள்ளார்.
  • நீலம் இதழின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர், மாணவர்களுக்காகப் புகழ்பெற்ற அறிஞரின் பெயரில் ஒரு பெல்லோஷிப் திட்டம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.

நீலம் பண்பாட்டு மையம்

  • இவ்மையம் 2015 உருவாக்கப்பட்டது.
  • நிறுவனர் – இயக்குநர் பா. ரஞ்சித்
  • வகை – சமூக அரசியல் அமைப்பு
  • தலைமையகம்-தமிழ்நாடு, இந்தியா
  • ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்களை ஊக்குவிக்க வானம் கலைத் திருவிழா என்ற நிகழ்வை 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்துகிறது.
Next தமிழ்நாடு விவகாரங்கள் >