சையத் மோடி சூப்பர் 300 சர்வதேச பேட்மிண்டன் போட்டி சையத் மோடி சூப்பர் 300 சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி ஆகியோர் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்தப் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. ஸ்ரீகாந்த் இரண்டாம் இடம்: ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஹாங்காங்கின் ஜேசன் ஹோ-ஷூவிடம் (Jason Ho-shue) தோல்வியடைந்து, பட்டத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

