உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் HIV தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் எய்ட்ஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2026-ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் மே 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. திருக்குறள் (எண் 824) அதிகாரம்: கூடா நட்பு முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை அஞ்சப் படும். பொருள் : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்ச வேண்டும். கிளாண்டர்ஸ் (Glanders) நோய் காரணி மற்றும் பாதிப்பு: 'பர்கோல்டேரியா மேலி' என்ற பாக்டீரியாவால் ஏற்படும் கிளாண்டர்ஸ் நோய், முதன்மையாக குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள் போன்ற குதிரை இன விலங்குகளைப் பாதிக்கிறது. மேலும், இது பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. சட்டப்பூர்வ அறிவிப்பு: விலங்குகளில் தொற்று மற்றும் பரவும் நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (PCICDA) சட்டம், 2009-ன் கீழ், இந்நோய் கண்டறியப்பட்டால் அது குறித்து அரசுக்குக் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கம் அரிவாள் செல் நோய் இந்தியாவில் மிகப் பெரிய பொதுசுகாதாரப் பிரச்சனையாகும். இது பழங்குடி மக்களை பாதிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் சிதைந்து, பிறை (அரிவாள்) வடிவமாகி, திசுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கிறது; பல உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிக்கும் நோக்கத்துடன் தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் பணி, பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியைக் கொண்டது. அரிவாள் செல் நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குவது, உலகளாவிய பரிசோதனை, பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் 0-40 வயதுக்குட்பட்ட 70 மில்லியன் மக்களுக்கு முழுமையான பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த இயக்கம் . தமிழ்நாடு இந்த நோயைக் கையாளு வதில் முன்னோடி மாநிலமாகத் திகழ் கிறது. குறிப்பாக நீலகிரி, ஆனைமலை போன்ற பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்து கிறது. பழங்குடியின வட்டாரங்களில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார் களுக்கும் கட்டாயப்பரிசோதனை நடத்தப் படுகிறது. இந்தியாவில் பாலினம் மற்றும் பராமரிப்பு தொடர்பான சட்டங்கள் சரத்து 15(3) – பொதுவான பாகுபாடின்மை விதிகளுக்கு ஒரு விதிவிலக்காகச் செயல்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகச் சிறப்புச் சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. சரத்து 16 – பொது வேலைவாய்ப்பு சார்ந்த விவகாரங்களில், அனைத்துக் குடிமக்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது. சரத்து 51A(e) – மதம், மொழி, பிராந்தியம் அல்லது பிரிவு சார்ந்த வேறுபாடுகளைக் கடந்து, இந்தியாவின் அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கத்தையும் பொதுச் சகோதரத்துவ உணர்வையும் வளர்ப்பதற்கும்; பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் நடைமுறைகளைக் கைவிடுவதற்கும் வலியுறுத்துகிறது. மகப்பேறு நலன் (திருத்தச்) சட்டம், 2017 ஆனது, பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும்…

