உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
- HIV தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் எய்ட்ஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2026-ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் மே 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
திருக்குறள் (எண் 824) அதிகாரம்: கூடா நட்பு
- முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
பொருள் : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
கிளாண்டர்ஸ் (Glanders) நோய்
- காரணி மற்றும் பாதிப்பு: ‘பர்கோல்டேரியா மேலி’ என்ற பாக்டீரியாவால் ஏற்படும் கிளாண்டர்ஸ் நோய், முதன்மையாக குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள் போன்ற குதிரை இன விலங்குகளைப் பாதிக்கிறது. மேலும், இது பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
- சட்டப்பூர்வ அறிவிப்பு: விலங்குகளில் தொற்று மற்றும் பரவும் நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (PCICDA) சட்டம், 2009-ன் கீழ், இந்நோய் கண்டறியப்பட்டால் அது குறித்து அரசுக்குக் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கம்
- அரிவாள் செல் நோய் இந்தியாவில் மிகப் பெரிய பொதுசுகாதாரப் பிரச்சனையாகும்.
- இது பழங்குடி மக்களை பாதிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் சிதைந்து, பிறை (அரிவாள்) வடிவமாகி, திசுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கிறது; பல உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
- 2047-ம் ஆண்டுக்குள் அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிக்கும் நோக்கத்துடன் தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இந்தப் பணி, பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியைக் கொண்டது.
- அரிவாள் செல் நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்குவது, உலகளாவிய பரிசோதனை, பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் 0-40 வயதுக்குட்பட்ட 70 மில்லியன் மக்களுக்கு முழுமையான பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த இயக்கம் .
- தமிழ்நாடு இந்த நோயைக் கையாளு வதில் முன்னோடி மாநிலமாகத் திகழ் கிறது.
- குறிப்பாக நீலகிரி, ஆனைமலை போன்ற பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்து கிறது.
- பழங்குடியின வட்டாரங்களில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார் களுக்கும் கட்டாயப்பரிசோதனை நடத்தப் படுகிறது.
இந்தியாவில் பாலினம் மற்றும் பராமரிப்பு தொடர்பான சட்டங்கள்
- சரத்து 15(3) – பொதுவான பாகுபாடின்மை விதிகளுக்கு ஒரு விதிவிலக்காகச் செயல்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகச் சிறப்புச் சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
- சரத்து 16 – பொது வேலைவாய்ப்பு சார்ந்த விவகாரங்களில், அனைத்துக் குடிமக்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.
- சரத்து 51A(e) – மதம், மொழி, பிராந்தியம் அல்லது பிரிவு சார்ந்த வேறுபாடுகளைக் கடந்து, இந்தியாவின் அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கத்தையும் பொதுச் சகோதரத்துவ உணர்வையும் வளர்ப்பதற்கும்; பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் நடைமுறைகளைக் கைவிடுவதற்கும் வலியுறுத்துகிறது.
- மகப்பேறு நலன் (திருத்தச்) சட்டம், 2017 ஆனது, பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் வலுவான சட்டப் பாதுகாப்பாகத் திகழ்கிறது.
- 2017-ஆம் ஆண்டின் இத்திருத்தச் சட்டமானது, இரண்டுக்கும் குறைவான உயிருள்ள குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக நீட்டித்ததுடன், பெரிய நிறுவனங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான விதிகளையும் அறிமுகப்படுத்தியது.
- சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (MEPZ)
- சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலம் என்பது இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாகும்.
- மத்திய அரசால் நாட்டில் அமைக்கப்பட்ட ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.
- இம்மண்டலத்தில் நேரடி அயல்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும், அயல்நாட்டுச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும், மேலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது 1984-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இம்மண்டலம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
- 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி, இம்மண்டலம் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.
பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம் (தால்ஹன் இயக்கம்)
- அக்டோபர் 2025-இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், துவரை, உளுந்து மற்றும் மசூர் ஆகிய பருப்பு வகைகளை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) 100% கொள்முதல் செய்வதாக உறுதியளித்தது.
- இந்தத் திட்டத்தின் கீழ், சாகுபடிப் பரப்பளவை விரிவுபடுத்துவதன் மூலம், ஐந்து ஆண்டுகளுக்குள் ஆண்டு உற்பத்தி அளவை 350 லட்சம் டன்களாக உயர்த்த, ₹11,440 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஆனால், ஏப்ரல் 2026-இல் அரசாங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, பருப்பு வகைகளை விதைப்பதற்கான சாகுபடிப் பரப்பளவு கடந்த ஆண்டை விட வெறும் 1.26% மட்டுமே அதிகரித்துள்ளது.
- 2021-22 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் சாகுபடிப் பரப்பளவில் ஏற்பட்ட 10% வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பு மிகவும் அற்பமான ஒன்றாகும்.

