Tag: XPoSat பணி

அறிவியல்

விண்வெளி XPoSat பணி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரமான எக்ஸ்ரே மூலங்களின் துருவமுனைப்பை ஆராய அதன் முதல் Xray Polarimeter Satellite (XPoSat)ஐ ஏவுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இருந்து கண்காணிப்பதற்காக XPoSat வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு அறிவியல் பேலோடுகளை சுமந்து செல்லும் திறன் உடையது. திட்டக்காலம்  தோராயமாக ஐந்து ஆண்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்மை பேலோடை  இஸ்ரோ மையங்களின் ஆதரவுடன் பெங்களூரு ராமன் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இரண்டாம் நிலை பேலோடை யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம், இஸ்ரோ உருவாக்கியுள்ளது