அறிவியல்

விண்வெளி

XPoSat பணி

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீவிரமான எக்ஸ்ரே மூலங்களின் துருவமுனைப்பை ஆராய அதன் முதல் Xray Polarimeter Satellite (XPoSat)ஐ ஏவுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
  • குறைந்த புவி சுற்றுப்பாதையில் இருந்து கண்காணிப்பதற்காக XPoSat வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது இரண்டு அறிவியல் பேலோடுகளை சுமந்து செல்லும் திறன் உடையது.
  • திட்டக்காலம்  தோராயமாக ஐந்து ஆண்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • முதன்மை பேலோடை  இஸ்ரோ மையங்களின் ஆதரவுடன் பெங்களூரு ராமன் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  • இரண்டாம் நிலை பேலோடை யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம், இஸ்ரோ உருவாக்கியுள்ளது
Next Current Affairs அறிவியல் >