Tag: MLFF சுங்கச்சாவடி கட்டண வசூல் அமைப்பு 2026

தேசிய நிகழ்வுகள்

MLFF சுங்கச்சாவடி கட்டண வசூல் அமைப்பு 2026 மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் பலவழிப் பாதை தடையற்ற ஓட்ட (MLFF) சுங்கச்சாவடி கட்டண வசூல் அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நெடுஞ்சாலை மேலாண்மை அமைப்பைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை முழுமையாக நீக்கி, பயணத்திறனை மேம்படுத்தும் வாகனங்கள் சுங்கச்சாவடிப் பகுதிகளை நிறுத்தாமல், மணிக்கு 80 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல முடியும். MLFF அமைப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உரிமத் தகடு அங்கீகாரமும், செயற்கைக்கோள் கண்காணிப்பும் மற்றும் FASTag ஒருங்கிணைப்பு மூலம் சுங்கக் கட்டணங்களை தானாகவே வசூலிக்கும். இந்தியாவின் முதல் வனவியல் பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் வனவியல் பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் நிறுவப்பட உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் வனவியல், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.