Tag: வேலை மோசடியில் ஈடுபட்ட  100க்கும் மேற்பட்ட  இணையதளங்கள் முடக்கம்

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொதுக் கருத்து ஜம்மு காஷ்மீர் (J&K)தொடர்பான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம் ஜம்மு காஷ்மீர் (J&K) தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் (J&K) இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 இது ஜம்மு காஷ்மீர் (J&K) இடஒதுக்கீடு சட்டம், 2004ஐ திருத்துகிறது. இது SC, ST மற்றும் பிற சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு (SEBC) வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் (J&K) மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 இது 2019 இன் ஜம்மு காஷ்மீர் (J&K)மறுசீரமைப்புச் சட்டத்தை திருத்துகிறது. இது மொத்த இடங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 114 ஆக உயர்த்துகிறது பட்டியல் இனத்தவருக்கு ஏழு இடங்களும், பழங்குடியினருக்கு  ஒன்பது இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலை மோசடியில் ஈடுபட்ட  100க்கும் மேற்பட்ட  இணையதளங்கள் முடக்கம் சமீபத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) இந்திய இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு  மையத்தின் (I4C) உள்ளீடுகளின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இணையதளங்களைத் முடக்கியது. I4C ஆனது அனைத்து வகையான இணையவெளி குற்றங்களையும் கையாள்வதற்காக உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.