அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொதுக் கருத்து

ஜம்மு காஷ்மீர் (J&K)தொடர்பான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம்

    • ஜம்மு காஷ்மீர் (J&K) தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
  • ஜம்மு காஷ்மீர் (J&K) இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023
  • இது ஜம்மு காஷ்மீர் (J&K) இடஒதுக்கீடு சட்டம், 2004ஐ திருத்துகிறது.
  • இது SC, ST மற்றும் பிற சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கு (SEBC) வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குகிறது.
  • ஜம்மு காஷ்மீர் (J&K) மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023
  • இது 2019 இன் ஜம்மு காஷ்மீர் (J&K)மறுசீரமைப்புச் சட்டத்தை திருத்துகிறது.
  • இது மொத்த இடங்களின் எண்ணிக்கையை 107ல் இருந்து 114 ஆக உயர்த்துகிறது
  • பட்டியல் இனத்தவருக்கு ஏழு இடங்களும், பழங்குடியினருக்கு  ஒன்பது இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேலை மோசடியில் ஈடுபட்ட  100க்கும் மேற்பட்ட  இணையதளங்கள் முடக்கம்

  • சமீபத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) இந்திய இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு  மையத்தின் (I4C) உள்ளீடுகளின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இணையதளங்களைத் முடக்கியது.
  • I4C ஆனது அனைத்து வகையான இணையவெளி குற்றங்களையும் கையாள்வதற்காக உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
Next Current Affairs அரசியல் அறிவியல் >