Tag: வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி – தலைமைத் தேர்தல் ஆணையம்

அரசியல் அறிவியல்

வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி – தலைமைத் தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த வசதியைப்பெற முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்தல் ஊழியர்கள், வீட்டுக்குச்சென்று மிகவும் இரகசியமாக படிவம் 12டில் வாக்கை பதிவு செய்து கொள்வார்கள். சக்ஷம் செயலி மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வாய்ப்பை தேர்வு செய்துகொள்ளலாம். சுவிதா செயலி வேட்பாளர்கள் வேட்புமனுக்களையும், உறுதியேற்புப் பத்திரங்களையும் தாக்கல் செய்யலாம். கூட்டங்கள், பேரணிகளுக்கான முன் அனுமதியையும் வேட்பாளர்கள் பெறலாம். இந்தியத் தேர்தல் ஆணையம் இது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி அரசியலமைப்பு அதிகாரமாகும். அரசியலமைப்பு விதிகள்:   பகுதி XV, கட்டுரை 324-329 25வது தலைமை தேர்தல் கமிஷனர் - ராஜீவ் குமார்.