Tag: யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரியப் பட்டியலில் கர்பா

தினசரி தேசிய நிகழ்வுகள்

மத்திய அரசு எத்தனால் உற்பத்தியை ஒழுங்குபடுத்த கட்டுப்பாடு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் 2023-2024 ஆம் ஆண்டில் எத்தனால் தயாரிக்க கரும்புச்சாறு அல்லது சிரப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று சர்க்கரை ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு  ஆலைகளுக்கு உத்தரவிட்டது. உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, சர்க்கரை (கட்டுப்பாட்டு) உத்தரவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலையான விலையில் உள்ளூர் நுகர்வுக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி, விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை கண்காணிக்கிறது. 2025-2026 எத்தனால் ஆண்டிற்குள் இந்தியா பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரியப் பட்டியலில் கர்பா குஜராத்தின் கர்பா நடனம் யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரிய பட்டியலில் (ICH) இடம்பெற்றுள்ளது. இது குஜராத்தில் நவராத்திரி பண்டிகையின் போது நிகழ்த்தப்படும் ஒரு நடன வடிவமாகும். கர்பா நடனமானது இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இணைந்த 15வது உணர்தற்கரிய பாரம்பரிய தளமாகும்.