தினசரி தேசிய நிகழ்வுகள்

மத்திய அரசு எத்தனால் உற்பத்தியை ஒழுங்குபடுத்த கட்டுப்பாடு

    • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் 2023-2024 ஆம் ஆண்டில் எத்தனால் தயாரிக்க கரும்புச்சாறு அல்லது சிரப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று சர்க்கரை ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு  ஆலைகளுக்கு உத்தரவிட்டது.
    • உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, சர்க்கரை (கட்டுப்பாட்டு) உத்தரவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலையான விலையில் உள்ளூர் நுகர்வுக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி, விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை கண்காணிக்கிறது.
  • 2025-2026 எத்தனால் ஆண்டிற்குள் இந்தியா பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரியப் பட்டியலில் கர்பா

  • குஜராத்தின் கர்பா நடனம் யுனெஸ்கோவின் உணர்தற்கரிய பாரம்பரிய பட்டியலில் (ICH) இடம்பெற்றுள்ளது.
  • இது குஜராத்தில் நவராத்திரி பண்டிகையின் போது நிகழ்த்தப்படும் ஒரு நடன வடிவமாகும்.
  • கர்பா நடனமானது இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இணைந்த 15வது உணர்தற்கரிய பாரம்பரிய தளமாகும்.
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >