Tag: மாநிலங்களின் சுயவிவரம்

வரலாறு

மாநிலங்களின் சுயவிவரம் சென்னை கிண்டி ”கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை” திறப்பு விழா. சென்னை, கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.240 கோடி செலவில் 1,000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை பொது மக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குறிப்பு: இந்தியாவிலேயே 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் 5,050 அரசு எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. பாதுகாப்பு அமெரிக்காவிடமிருந்து 30 அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்குகிறது இந்தியா  அமெரிக்காவின் 30 அதிநவீன ”எம்க்யூ-9பி பிரடேட்டர்” ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. வாங்கப்படவுள்ள முப்பது ட்ரோன்களில், கடற்படைக்கு 14 ட்ரோன்களும், விமானப்படை, ராணுவத்துக்கு தலா 8 ட்ரோன்களும் வழங்கப்படும். 35 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து பறக்கக் கூடிய இந்த ட்ரோன்களில் 450 கிலோ வெடி பொருள்களை அனுப்பலாம். கடலோர கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் திறன் கொண்டவையாகவும், வான் பாதுகாப்பு திறன் கொண்டவையாகவும் இந்த ட்ரோன்கள் இருவகையில் உள்ளன. சிறந்த நபர்கள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் 2027-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் சம்மேளனம் (ஃபிக்கி) சார்பில் ”சுதந்திர நூற்றாண்டில் இந்திய பொருளாதாரம், அமிர்த காலத்துக்கான பயணம்” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது 2023-2024 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது. 2018-19-இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக இருந்தது. ஆனால், 2021 முதல் 2028-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாக உயரும் வாய்ப்புள்ளது. ஐஎஃப்ஏடி தலைவருடன் மத்திய நிதியமைச்சர் சந்திப்பு வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் (ஐஎஃப்ஏடி) தலைவர் ஆல்வரோ லாரியோவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். புது தில்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உணவு சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான வேளாண்மையில் லாபத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஐஎஃப்ஏடி திறம்பட பங்களிப்பை ஆற்றவேண்டும் என்று லாரியோவிடம் மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். IFAD பற்றி ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் முனையமாக செயல்படும் ஐஎஃப்ஏடி, ஓர் சர்வதேச நிதி நிறுவனமாகும். 1978-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்கு மானியங்கள் மற்றும் குறைந்த வட்டியிலான கடன்களை ஐஎஃப்ஏடி வழங்கியுள்ளது. உலக அமைப்புகள் UNHRC: 2022 இல் கட்டாய…