வரலாறு

மாநிலங்களின் சுயவிவரம்

சென்னை கிண்டி ”கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை” திறப்பு விழா.

  • சென்னை, கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.240 கோடி செலவில் 1,000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை பொது மக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவ ஊழியர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குறிப்பு:

  • இந்தியாவிலேயே 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் 5,050 அரசு எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

பாதுகாப்பு

அமெரிக்காவிடமிருந்து 30 அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்குகிறது இந்தியா 

  • அமெரிக்காவின் 30 அதிநவீன ”எம்க்யூ-9பி பிரடேட்டர்” ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
  • வாங்கப்படவுள்ள முப்பது ட்ரோன்களில், கடற்படைக்கு 14 ட்ரோன்களும், விமானப்படை, ராணுவத்துக்கு தலா 8 ட்ரோன்களும் வழங்கப்படும்.
  • 35 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து பறக்கக் கூடிய இந்த ட்ரோன்களில் 450 கிலோ வெடி பொருள்களை அனுப்பலாம்.
  • கடலோர கண்காணிப்பு, நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் திறன் கொண்டவையாகவும், வான் பாதுகாப்பு திறன் கொண்டவையாகவும் இந்த ட்ரோன்கள் இருவகையில் உள்ளன.

சிறந்த நபர்கள்

தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன்

  • 2027-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
  • இந்திய தொழில் வர்த்தக சபைகளின் சம்மேளனம் (ஃபிக்கி) சார்பில் ”சுதந்திர நூற்றாண்டில் இந்திய பொருளாதாரம், அமிர்த காலத்துக்கான பயணம்” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது

  • 2023-2024 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது.
  • 2018-19-இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது.
  • உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக இருந்தது.
  • ஆனால், 2021 முதல் 2028-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாக உயரும் வாய்ப்புள்ளது.

ஐஎஃப்ஏடி தலைவருடன் மத்திய நிதியமைச்சர் சந்திப்பு

  • வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் (ஐஎஃப்ஏடி) தலைவர் ஆல்வரோ லாரியோவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
  • புது தில்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உணவு சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான வேளாண்மையில் லாபத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஐஎஃப்ஏடி திறம்பட பங்களிப்பை ஆற்றவேண்டும் என்று லாரியோவிடம் மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

IFAD பற்றி

  • ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் முனையமாக செயல்படும் ஐஎஃப்ஏடி, ஓர் சர்வதேச நிதி நிறுவனமாகும்.
  • 1978-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்கு மானியங்கள் மற்றும் குறைந்த வட்டியிலான கடன்களை ஐஎஃப்ஏடி வழங்கியுள்ளது.

உலக அமைப்புகள்

UNHRC: 2022 இல் கட்டாய இடப்பெயர்வு அறிக்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC)

  • இந்த அறிக்கை அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், நாடற்ற நபர்கள் மற்றும் அவர்களது நாடுகளுக்கு அல்லது பிறப்பிடங்களுக்குத் திரும்பியவர்கள் பற்றிய தரவுகளை வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்:

  • துன்புறுத்தல், மோதல்கள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் காரணமாக உலகளவில் 108.4 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
  • 2022 இல் சமூக மற்றும் காலநிலை நெருக்கடிகள் காரணமாக வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2021 ஐ விட 21% அதிகமாகும்.
  • வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்களில் 30% குழந்தைகள்.
  • உலகின் 76% அகதிகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். சுமார் 4.4 மில்லியன் மக்கள் நாடற்றவர்கள் அல்லது தீர்மானிக்கப்படாத தேசியம் கொண்டவர்களாக உள்ளனர். இது 2021ஐ விட 2% அதிகம்.
  • 6 மில்லியன் இடம்பெயர்ந்த மக்கள் 2022 இல் தங்கள் பகுதிகளுக்கு அல்லது பிற நாடுகளுக்குத் திரும்பினர்.

UNHCR பற்றி:

  • தலைவர் – பிலிப்போ கிராண்டி (அகதிகளுக்கான உயர் ஆணையர்)
  • HQ – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • நிறுவப்பட்டது – 1950

நோக்கங்கள்:

  • அகதிகளின் உயிர்களைக் காப்பாற்றுதல், உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த சமூகங்கள் மற்றும் நாடற்ற மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்.

செயல்பாடுகள்:

  • நாட்டில் வன்முறை, துன்புறுத்தல், போர் அல்லது பேரழிவு போன்றவற்றிலிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாப்பான புகலிடம் தேடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பதை உறுதிசெய்தல்.

குறிப்பு:

  • இந்தியா 1951 அகதிகள் மாநாடு மற்றும் அதன் 1967 நெறிமுறையில் பங்கேற்பாளராக இல்லை. மேலும், தேசிய அகதிகள் பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் இணைய முடக்கங்கள்: அறிக்கை

  • இன்டர்நெட் ஃப்ரீடம் பவுண்டேஷன் (IFF) மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம்  (HRW) ஆகிய அமைப்புகளால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • இணைய நிறுத்தம் என்பது இணைய அணுகலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அல்லது வேகத்தைக் குறைக்கும் அல்லது குறிப்பிட்ட உள்ளடக்கததைக் கட்டுப்படுத்தும் செயல்களை உள்ளடக்கியது. 

முக்கிய அம்சங்கள்

  • 18 மாநிலங்கள் 2020 முதல் 2022 வரை ஒருமுறையாவது இணையத்தை முடக்கியுள்ளன.
  • ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான  இணைய நிறுத்தம் காணப்பட்டது.
  • ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இணைய முடக்கம் குறித்து அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.
  • அதிகாரிகள் வகுப்புவாத வன்முறைக்கு எதிராக (18 வழக்குகள்), போராட்டங்கள் (53 வழக்குகள்) மற்றும் பள்ளித் தேர்வுகளில் (37 வழக்குகள்) மோசடியைத் தடுக்க இணைய முடக்கத்தைப் பயன்படுத்தினர்.

இணைய முடக்கத்தின் தாக்கம்

  • பொருளாதார தாக்கம்: வணிகங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மீதான வர்த்தகம் அதிகரித்து வருவதால், அனைத்துப் பொருளாதாரத் துறைகளிலும் தீவிரமான பின்விளைவுகள் உள்ளன.
  • அடிப்படை உரிமைகள் மீதான தாக்கம்: ஒரு மாநிலத்தில் பேச்சுரிமை, வணிகம் நடத்துதல், எதிர்ப்பை வெளிப்படுத்துதல் மற்றும் மக்கள் நடமாட்டம் ஆகியவற்றுக்கான உரிமை.
  • அடிப்படை சேவைகள் மீதான தாக்கம்: கல்வி, சுகாதாரம் மற்றும் பிற பொது சேவைகள்.
  • தனியுரிமைக்கான ஆபத்து: இது பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்களை வெளிப்படுத்துகிறது.

இணைய இடைநீக்கத்திற்கான சட்ட விதிகள்

  • இந்திய தந்திச் சட்டம், 1885ன் கீழ் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநிறுத்தம் (பொது அவசரநிலை மற்றும் பொதுப் பாதுகாப்பு) விதிகள் 2017 தொலைத் சேவைகள் நிறுத்தி வைப்பதற்கு (இணைய முடக்கம் உட்பட) உதவுகிறது.
  • 2017 விதிகள் பொது அவசரநிலையின் அடிப்படையில் ஒரு பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு (ஒரே நேரத்தில் 15 நாட்கள் வரை) அனுமதி வழங்குகின்றது.
  • உள்துறை அமைச்சகம், மத்திய மற்றும் மாநில அளவிலான மூத்த அதிகாரிகளுக்கு இணைய முடக்கம் செய்ய உத்தரவிட இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

HRW பற்றி

  • இயக்குனர் – திரானா ஹசன்
  • தலைமையகம் – நியூயார்க், அமெரிக்கா
  • நிறுவப்பட்டது – 1978

IFF பற்றி

  • தலைவர் – அபர் குப்தா
  • தலைமையகம் – புது டெல்லி, இந்தியா

நிறுவப்பட்டது – 2016

Next வரலாறு >