Tag: மரபணுசார் ரத்தசோகை நோய் ஒழிப்புத் திட்டம்

அரசியல்

அரசு நலத்திட்டங்கள் மரபணுசார் ரத்தசோகை நோய் ஒழிப்புத் திட்டம் மரபணுசார் ரத்தசோகை நோயை (சிக்கிள் செல் அனீமியா) 2047-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கொள்கைகளையும் சிறப்பு வலைதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது 3 கோடிக்கும் அதிகமானோருக்கு எண்ம வடிவிலான ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மரபணுசார் ரத்தசோகை நோய்க்கு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான அட்டைகளையும் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார். மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறுவதற்கு ஆயுஷ்மான் காப்பீட்டு அட்டை உதவும். மரபணு சார் ரத்தசோகை நோயால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் இந்தியாவிலேயே உள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையில் (2021-22) வேலை வாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2021-இல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலை வாய்ப்ப அலுவலங்களில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறைக்கும், முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்குவதற்கும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தேவையான ஆணைகள் வழங்குமாறு மனிதவள மேலாண்மை துறை கேட்டுக் கொண்டுள்ளது.