Tag: பேரிடர் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI)

தேசிய நிகழ்வுகள்

இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட காலநிலை இலக்குகள் (NDCs) பின்னணி: 2035-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் 60 சதவீதம் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து பெறப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது. தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கீழ் சமர்ப்பிக்கப்படும் காலநிலை நடவடிக்கை இலக்குகளே NDCs ஆகும். புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான பாரிஸ் உடன்படிக்கையின் (Paris Agreement) கீழ் எடுக்கப்பட்ட உறுதிமொழிகளின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் புதிய 2035 காலநிலை இலக்குகள் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 60% படிமமற்ற எரிபொருள் (Non-fossil fuel) ஆதாரங்களில் இருந்து பெறுதல். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) உமிழ்வு தீவிரத்தை 47% ஆகக் குறைத்தல் (2005-ஆம் ஆண்டு அளவிலிருந்து). கார்பன் சிங்க் (Carbon Sink): 3.5 முதல் 4 பில்லியன் டன் வரையிலான CO₂-க்கு இணையான கார்பன் சேமிப்புத் திறனை அதிகரித்தல். நடப்பு தகவல்கள் மத்திய அரசின் 2024-25 ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கையின்படி, தமிழகத்தில் 82.5% அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. ஜக்கரண்டா மிமோசிஃபோலியா என்பது ஒரு இலையுதிர் வகை மரமாகும் . இது பிக்னோனியாசி (Bignoniaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. தற்போதைய 2030 இலக்குகள் 50% மின் உற்பத்தித் திறன் படிமமற்ற ஆதாரங்களில் இருந்து பெறுதல். உமிழ்வு தீவிரத்தை 44% குறைத்தல். 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டன் வரை கார்பன் சேமிப்புத் திறனை அதிகரித்தல். இந்தியாவின் காலநிலை முன்னேற்றம் ஏற்கனவே சுமார் 52% நிறுவப்பட்ட திறன் படிமமற்ற ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது (இலக்கு முன்கூட்டியே எட்டப்பட்டது). இருப்பினும், ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் சுமார் 25% மட்டுமே படிமமற்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது. 2005-2019 காலப்பகுதியில் 1.97 பில்லியன் டன் CO₂-க்கு இணையான சேமிப்புத் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. 2005-ல் 21%-ஆக இருந்த காடு மற்றும் மரங்களின் பரப்பளவு, 2021-ல் 24.6% ஆக உயர்ந்துள்ளது (இருப்பினும் இது 33% என்ற இலக்கை விடக் குறைவு). 2005-2020 காலப்பகுதியில் உமிழ்வு தீவிரம் 36% குறைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற மாநாடு  காலநிலை சிக்கல்களை விவாதிக்கவும், பொருளாதாரத்தைப் படிம எரிபொருட்களிலிருந்து மாற்றவும் ஆண்டுதோறும் கூடும் நாடுகளின் கூட்டமைப்பாகும். டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, ஜி-20 (G-20) நாடுகளில் இந்தியாவும் அர்ஜென்டினாவும் மட்டுமே 2035-க்கான NDC இலக்குகளை அறிவிக்காமல் இருந்தன. அந்தத் தேதிக்குள், உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் சுமார் 78%-ஐக் குறிக்கும் 128 நாடுகள் தங்களின் புதிய NDC-களைச் சமர்ப்பித்திருந்தன. நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு சூழல் : இந்திய அரசியலமைப்பின் சரத்து  51A (g)-ஐ மேற்கோள் காட்டி, வணிகம் செய்யும் சுதந்திரமானது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்குமான கடமையையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) பற்றி CSR என்பது நிறுவனங்கள் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் வகையில் செயல்படுவதோடு, தங்களது பங்குதாரர்களிடம் (Stakeholders) பொறுப்புணர்வுடன்…