Tag: புனத்சாங்சு-II (Punatsangchhu-II) நீர்மின் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து

தேசிய நிகழ்வுகள்

பாலி மொழி மற்றும் AI மேம்பாட்டிற்கான பாஷினி (BHASHINI) பணிமனை சூழல்: டெல்லி பல்கலைக்கழகத்தில், பாலி மொழிப் பாதுகாப்பு மற்றும் மின்னணு AI மாதிரி மேம்பாட்டிற்கான "பாஷினி சஞ்சலன்/சேவா" (BHASHINI Sanchalan/Seva) பணிமனை சமீபத்தில் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பு அமைப்புகள்  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மின்னணு இந்தியா பாஷினி பிரிவு (DIBD). டெல்லி பல்கலைக்கழகத்தின் பௌத்த ஆய்வுகளுக்கான மேம்பட்ட ஆய்வுக் மையத்துடன் (Centre for Advanced Studies in Buddhist Studies) இணைந்து இது நடத்தப்பட்டது. முக்கிய மொழி  பண்டைய மத்திய இந்தோ-ஆரிய மொழியான பாலி (Pali) மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது திரிபிடகா  உள்ளிட்ட ஆரம்பகால பௌத்த புனித நூல்களின் முதன்மை மொழியாகும். கலாச்சார மற்றும் கொள்கை முக்கியத்துவம்  பாரம்பரியம் மற்றும் சிறுபான்மையின மொழிகளின் பாதுகாப்பை இது ஆதரிக்கிறது. இது மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. AI மேம்பாட்டு இலக்குகள்  பாலி மொழிக்கான பிரத்யேக AI மாதிரிகளை உருவாக்குதல். முக்கிய கவனம்: தரவு சேகரிப்பு (Data collection), சரிபார்ப்பு கட்டமைப்புகள் (Validation frameworks) மற்றும் சமூக பங்கேற்பு (Community participation). நடப்பு தகவல்கள் திறன் திட்டம்  தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் சிறப்புப் பயிற்சி அளித்து, கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக 'திறன்' (Targeted Help for Improving Remediation and Academic Nurturing) எனப்படும் கல்வி மேம்பாட்டுத் திட்டம் ஜூலை 2025ல் செயல்படுத்தப்பட்டது.  இந்திய செமிகண்டக்டர் திட்டம் (ISM) 2.0 சூழல்: இந்திய செமிகண்டக்டர் திட்டம் 2.0, உற்பத்தியைத் தாண்டி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), மூலப்பொருட்கள், உபகரண உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் குறைக்கடத்தி வடிவமைப்பு பொறியாளர்களில் (Design Engineers) கிட்டத்தட்ட 20% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், போதுமான உள்நாட்டு வடிவமைப்பு நிறுவனங்கள் இல்லாதது ஒரு கட்டமைப்பு சமநிலையின்மையைக் காட்டுகிறது. எதிர்கால பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக AI (செயற்கை நுண்ணறிவு), செமிகண்டக்டர்கள் மற்றும் மேம்பட்ட மூலப்பொருட்கள் போன்ற ஆழமான தொழில்நுட்பத் (Deep-tech) துறைகளை அரசாங்கம் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. ISM 2.0 பற்றி மத்திய பட்ஜெட் 2026-27-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ISM 2.0, இந்தியாவின் செமிகண்டக்டர் திறன்களை வலுப்படுத்துவதற்கான  குறிப்பிடத்தக்க படியாகும். நிதி ஆண்டு 2026-27-க்கான இதன் தொடக்கப் பணிகளுக்காக சுமார் ₹1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'சிப்ஸ் டு ஸ்டார்ட்அப்' (C2S) போன்ற திட்டங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மூலம் பயிற்சி அளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு பின்வரும் துறைகளில் உள்நாட்டுத் திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது: செமிகண்டக்டர் உபகரணங்கள் மூலப்பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் சிறப்பு வாயுக்கள் (Specialty gases) நோக்கம்:…