Tag: புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை

பொருளாதாரம்

புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை UDGAM போர்ட்டலை RBI அறிமுகப்படுத்தியது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனிநபர்கள் தங்கள் உரிமை கோரப்படாத வங்கி தொகையைத் தேடுவதற்கான தீர்வை வெளியிட்டுள்ளது. UDGAM (உரிமை கோரப்படாத வங்கி தொகைகள் - தகவல்களை அணுகுவதற்கான முகப்பு) போர்டல். இந்த மையப்படுத்தப்பட்ட இணைய தளமானது, பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத  வங்கி தொகைகளைக் கண்டறியும் செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பு ரிசர்வ் பேங்க் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (ReBIT), இந்தியன் ஃபைனான்சியல் டெக்னாலஜி & அலைட் சர்வீசஸ் (IFTAS) ஆகியவற்றுடன் இணைந்து RBI இந்த தளத்தை உருவாக்கியது. தற்போது, ​​UDGAM போர்டல் ஏழு வங்கிகளில் இருந்து கோரப்படாத வைப்புத்தொகை தகவல்களுக்கான அணுகலை வழங்குகிறது. அவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தனலக்ஷ்மி வங்கி, டிபிஎஸ் பேங்க் இந்தியா மற்றும் சிட்டி பேங்க். மற்ற வங்கிகளுக்கு, அக்டோபர் 15, 2023க்குள் தேடல் அம்சம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். RBI பற்றி ஆளுநர் - சக்திகாந்த தாஸ் தலைமையகம் - மும்பை நிறுவப்பட்டது - ஏப்ரல் 1, 1935

பொருளாதாரம்

புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி இணைய வழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் (கேசினோ) கட்டப்படும் முழு பந்தய தொகை மீதுதான் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் இது அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் 51-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜிஎஸ்டி பற்றி  மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் - 2017 ஆனது 101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.  ஜிஎஸ்டி சட்டங்கள் - ஜூலை 1, 2017 அன்று முதல் அமல்டுத்தப்பட்டன. சர்ச்சை தீர்வு திட்டம் (Dispute Settlement Scheme) அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் அல்லது சப்ளையர்களுடனான ஒப்பந்த தகராறுகளுக்கான தீர்வுத் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. விவாத் சே விஸ்வாஸ் II திட்டம் அரசாங்கத்திற்கும் அதன் விற்பனையாளர்களுக்கும் இடையே உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 'விவாத் சே விஸ்வாஸ் II - (ஒப்பந்த தகராறுகள்)' என்ற திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் அனைத்து உள்நாட்டு ஒப்பந்த தகராறுகளுக்கும் பொருந்தும். இதில் ஒரு தரப்பினர் இந்திய அரசு அல்லது அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்பாக இருக்கும்.