பொருளாதாரம்

புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை

UDGAM போர்ட்டலை RBI அறிமுகப்படுத்தியது

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனிநபர்கள் தங்கள் உரிமை கோரப்படாத வங்கி தொகையைத் தேடுவதற்கான தீர்வை வெளியிட்டுள்ளது.
  • UDGAM (உரிமை கோரப்படாத வங்கி தொகைகள் – தகவல்களை அணுகுவதற்கான முகப்பு) போர்டல்.
  • இந்த மையப்படுத்தப்பட்ட இணைய தளமானது, பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத  வங்கி தொகைகளைக் கண்டறியும் செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

  • ரிசர்வ் பேங்க் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (ReBIT), இந்தியன் ஃபைனான்சியல் டெக்னாலஜி & அலைட் சர்வீசஸ் (IFTAS) ஆகியவற்றுடன் இணைந்து RBI இந்த தளத்தை உருவாக்கியது.
  • தற்போது, ​​UDGAM போர்டல் ஏழு வங்கிகளில் இருந்து கோரப்படாத வைப்புத்தொகை தகவல்களுக்கான அணுகலை வழங்குகிறது.
  • அவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தனலக்ஷ்மி வங்கி, டிபிஎஸ் பேங்க் இந்தியா மற்றும் சிட்டி பேங்க்.
  • மற்ற வங்கிகளுக்கு, அக்டோபர் 15, 2023க்குள் தேடல் அம்சம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

RBI பற்றி

  • ஆளுநர் – சக்திகாந்த தாஸ்
  • தலைமையகம் – மும்பை
  • நிறுவப்பட்டது – ஏப்ரல் 1, 1935
Next பொருளாதாரம் >

People also Read