Tag: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)

அரசியல் அறிவியல்

அரசு நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 40.82 கோடி பயனாளிகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ரூ.23.2 லட்சம் கோடியை வழங்கியுள்ளன. PMMY பற்றி: MUDRA என்பது Micro Units Development & Refinance Agency Ltd என்பதன் சுருக்கம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) ஏப்ரல் 8, 2015 அன்று, கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கு வருமானத்திற்காக ரூ.10 லட்சம் வரை எளிதாக பிணையமில்லாத சிறுகடன்களை எளிதாக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. - மூன்று வித கடன்கள் : பயனாளிகளின் குறு தொழில்  வளர்ச்சி மற்றும் நிதித் தேவைகளுக்கு ஏற்ப 'சிசு ', 'கிஷோர்' மற்றும் 'தருண்' ஆகிய மூன்று வித கடன்கள் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது சிசு : ரூ.50,000 வரை கிஷோர்:50,000 முதல் ரூ. 5 லட்சம். தருண்: 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம்.