பால் புரஸ்கார் விருது சிறந்த சாதனைகளைப் படைத்த 20 குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். சீக்கிய மதத்தின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்களான சாஹிப்சாதா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்சாதா ஃபதே சிங் ஆகியோரின் துணிச்சலான தியாகத்தின் நினைவாக 'வீர் பால் திவாஸ்' ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்த வயோமா பிரியாவுக்கு மத்திய அரசு 'வீர் பால் புரஸ்கார்' வழங்கி கௌரவித்தது. சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்வதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் 7 வயதான வாகா லட்சுமி பிரக்னிகா, அதிக போட்டித் திறனைக் கொண்ட கிரிக்கெட் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, மற்றவர்களின் உயிரைத் துணிச்சலாகவும், சாமர்த்தியாமாகவும் காத்த அஜய் ராஜ் மற்றும் முசு மது சிதான், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தன் வீட்டுக்கு அருகில் இருந்த எல்லையில் நாட்டுக்காகப் போராடிக்கொண்டிருந்த ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயதான ஷ்ரவண் சிங், தின்நிதி தேசிங்கு: நீச்சல் போட்டிக்கு ஆகியோர் பால் புரஸ்கார் விருது பெற்றனர்.

