Tag: பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பரிந்துரை

தினசரி தேசிய நிகழ்வுகள்

பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பரிந்துரை பாலியல் உறவு சார்நத வழக்குகளில் சிறார்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சிறுமிகளின் பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆகக் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பெண்கள் பாலியல் உறவு குறித்து சுயமாக முடிவெடுக்கும் வயது முன்பு 16-ஆக இருந்தது. நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு மத்திய அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தங்கள் மூலமாக அந்த வயது 18-ஆக அதிகரிக்கப்பட்டது.