Tag: பரிந்துரைக் குழு

தமிழ்நாடு

தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமரை உள்ளடக்கிய குழு இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர், மற்ற தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட பரிந்துரைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பரிந்துரைக் குழு:  தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு குறிப்பிடுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையரையும் மற்ற தேர்தல் ஆணையர்களையும் குடியரசுத் தலைவரே நியமிப்பார்.  அதே வேளையில், ஆணையர்கள் நியமனத்துக்கான பரிந்துரைக் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறுவர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருக்கும்பட்சத்தில், எதிர்க்கட்சியில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியின் தலைவர் குழுவில் இடம் பெறுவார்.