Tag: பனை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்

பொருளாதாரம்

தமிழக வேளாண் பட்ஜெட் 2023-2024 வேளாண்மை பட்ஜெட் ஒதுக்கீடு: 38 ஆயிரத்து 904 கோடியே 46 இலட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக ’அக்ரி கிளினிக்’ வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சிற்றுாரில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், வேண்டிய மற்ற பணிகளையும் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, இத்திட்டம். வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “சிறுதானிய திருவிழாக்களும்“ இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும். வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் வரும் ஆண்டில், 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செயல்படுத்தப்படும்.  அங்கக வேளாண்மை (organic Farming ) ஊக்குவிப்பு அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன்பெறும் வகையில், காலதாமதம் இன்றி இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும். சிறந்த அங்கக விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது“  அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் “நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்“.  இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். GRAINS –ஒரு தளம் – பல பயன்கள் அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களை வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும்(One Stop Solution) கிடைக்கும். பயறு பெருக்குத் திட்டம் தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்திடும் நோக்கத்துடன், சூரியகாந்தி பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அதிக இலாபம் தரக்கூடிய நிலக்கடலை, எள்,  சோயா மொச்சை போன்ற பயிர்களைப் பரவலாக்கம் செய்திடவும் வரும் நிதியாண்டில் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இயற்கை…