இந்தியப் பொருளாதாரம்

நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம்

  • பின்னணி : நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் அது 2.74% ஆக இருந்தது.
  • இந்த தகவலை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
  • உணவுப் பணவீக்கம் ஜனவரியில் 2.13% இருந்தது.பிப்ரவரியில் 3.47% ஆக உயர்ந்துள்ளது.
  • கிராமப்புறங்களில் பணவீக்கம் 3.37% ஆகவும், நகர்ப்புறங்களில் 3.02% ஆகவும் பதிவாகியுள்ளது.

சில்லறை பணவீக்கம் பற்றி 

  • சில்லறை பணவீக்கம் என்பது  நுகர்வோர் அன்றாடப் பயன்பாட்டிற்காக கடைகளில் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் (உணவு, உடை, வீட்டுவசதி, எரிபொருள்) விலை உயர்வைக் குறிக்கிறது.
  • இது நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) மூலம் அளவிடப்படுகிறது.
தேசிய நிகழ்வுகள்
< Previous Current Affairs Next இந்தியப் பொருளாதாரம் >