Tag: நிபுணர் குழு உறுப்பினர்கள்

வரலாறு

நியமனங்கள் மத்தியஸ்த சட்டத்தை சீரமைக்க நிபுணர் குழு: மத்திய அரசு அமைத்தது நீதிமன்றங்களின் வழக்கு சுமையைக் குறைக்கும் வகையில், மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டத்தை சீரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க மத்திய முன்னாள் சட்டச் செயலர் டி.கே. விஸ்வநாதன் தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டம் – 1996-இல் சீரமைப்பு செய்ய இந்த குழு உதவும். இதன் மூலம் பல்வேறு விவகாரங்களில் நீதிமன்ற தலையீடுகளைக் குறைத்து, மத்தியஸ்த நடைமுறையின் மூலம் விரைந்து பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இது நிதி மற்றும் நேர செலவீனத்தைக் குறைக்கும் என்ற சட்ட விவகாரத் துறை தெரிவித்துள்ளது. நிபுணர் குழு உறுப்பினர்கள் அட்டர்னி ஜெனரல் என்.வெங்கடராமன், மத்திய சட்ட அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ராஜீவ் மணி, மூத்த வழங்குரைஞர்கள், தனியார் சட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் நீதி ஆயோக், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய பொதுப் பணித் துறை ஆகியவற்றின் உறுப்பினர்கள். குறிப்பு: மத்தியஸ்தம் நடைமுறை என்பது, இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகாமல் மத்தியஸ்தர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகும். உலக அமைப்புகள் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டு நடவடிக்கை ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் கூட்டம், ஹைதராபாதில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பிரதமர் மோடி விடியோ மூலம் பேசியது. உலகளவில் 250 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேளாண்மை வாழ்வாதாரத்தை அளிக்கிறது. தெற்குலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை அளிப்பதுடன், 60 சதவீதத்துக்கும் அதிகமான வேலைகளையும் வழங்குகிறது. கழிவில் இருந்து செல்வம்: உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கையை எவ்வாறு மேற்கோள்ளலாம் என்பது குறித்து வேளாண் அமைச்சர்கள் ஆலோசிக்க வேண்டும். உலகளாவிய உர விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டும். சிறுதானிய உணவுகள் ஊட்டச்சத்துமிச்சுவை; இப்பயிருக்கு குறைந்த நீர் மற்றும் உரமே தேவை என்பதால் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது. சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் நேரு நூலகம் ”பிரதமர் நூலகம்” எனப் பெயர் மாற்றம் தில்லியில் தீன்மூர்த்தி பவனில் அமைந்துள்ள நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலகத்தின் பெயரை ”பிரதமரின் அருங்காட்சியம் மற்றும் நூலகம்” என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலக சொசைட்டியின் (என்எம்எம்எல்) சிறப்புக் கூட்டத்தில் அதன் பெயரை மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்தது. புதிய பெயரில் இனி செயல்படும் இந்த சொசைட்டியில் ஜவாஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளும், பிரதமர்களின் பங்களிப்புகளும், பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொண்ட விதம் குறித்த தகவல்களும் காட்சியப்படுத்தப்படும்.  குறிப்பு: ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவருடைய அதிகாரபூர்வ இல்லமாக தீன்மூர்த்தி பவன் விளங்கியது. இங்கு 16 ஆண்டுகள் அவர் வசித்தார். அதனை நினைவுகூரும் விதமாக இந்த இல்லம் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டு…