வரலாறு

நியமனங்கள்

மத்தியஸ்த சட்டத்தை சீரமைக்க நிபுணர் குழு: மத்திய அரசு அமைத்தது

  • நீதிமன்றங்களின் வழக்கு சுமையைக் குறைக்கும் வகையில், மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டத்தை சீரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க மத்திய முன்னாள் சட்டச் செயலர் டி.கே. விஸ்வநாதன் தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டம் – 1996-இல் சீரமைப்பு செய்ய இந்த குழு உதவும்.
  • இதன் மூலம் பல்வேறு விவகாரங்களில் நீதிமன்ற தலையீடுகளைக் குறைத்து, மத்தியஸ்த நடைமுறையின் மூலம் விரைந்து பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இது நிதி மற்றும் நேர செலவீனத்தைக் குறைக்கும் என்ற சட்ட விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

நிபுணர் குழு உறுப்பினர்கள்

  • அட்டர்னி ஜெனரல் என்.வெங்கடராமன், மத்திய சட்ட அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ராஜீவ் மணி, மூத்த வழங்குரைஞர்கள், தனியார் சட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் நீதி ஆயோக், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய பொதுப் பணித் துறை ஆகியவற்றின் உறுப்பினர்கள்.

குறிப்பு:

  • மத்தியஸ்தம் நடைமுறை என்பது, இரு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகாமல் மத்தியஸ்தர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகும்.

உலக அமைப்புகள்

உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டு நடவடிக்கை

  • ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் கூட்டம், ஹைதராபாதில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி விடியோ மூலம் பேசியது.

  • உலகளவில் 250 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேளாண்மை வாழ்வாதாரத்தை அளிக்கிறது. தெற்குலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை அளிப்பதுடன், 60 சதவீதத்துக்கும் அதிகமான வேலைகளையும் வழங்குகிறது.

கழிவில் இருந்து செல்வம்:

  • உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கையை எவ்வாறு மேற்கோள்ளலாம் என்பது குறித்து வேளாண் அமைச்சர்கள் ஆலோசிக்க வேண்டும்.
  • உலகளாவிய உர விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டும்.
  • சிறுதானிய உணவுகள் ஊட்டச்சத்துமிச்சுவை; இப்பயிருக்கு குறைந்த நீர் மற்றும் உரமே தேவை என்பதால் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது.

சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்

நேரு நூலகம் ”பிரதமர் நூலகம்” எனப் பெயர் மாற்றம்

  • தில்லியில் தீன்மூர்த்தி பவனில் அமைந்துள்ள நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலகத்தின் பெயரை ”பிரதமரின் அருங்காட்சியம் மற்றும் நூலகம்” என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • நேரு நினைவு அருங்காட்சியம் மற்றும் நூலக சொசைட்டியின் (என்எம்எம்எல்) சிறப்புக் கூட்டத்தில் அதன் பெயரை மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்தது.
  • புதிய பெயரில் இனி செயல்படும் இந்த சொசைட்டியில் ஜவாஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளும், பிரதமர்களின் பங்களிப்புகளும், பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொண்ட விதம் குறித்த தகவல்களும் காட்சியப்படுத்தப்படும். 

குறிப்பு:

  • ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவருடைய அதிகாரபூர்வ இல்லமாக தீன்மூர்த்தி பவன் விளங்கியது. இங்கு 16 ஆண்டுகள் அவர் வசித்தார். அதனை நினைவுகூரும் விதமாக இந்த இல்லம் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.

சிறுதானியங்களின் பயன்கள்- பாடல் எழுதிய பிரதமர்

  • சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும் உலக மக்களின் பசியைப் போக்க அவை ஆற்றும் பங்கு குறித்தும் கிராமி விருது பெற்ற இந்திய-அமெரிக்கப் பாடகி ஃபாலுடன் இணைந்து பாடல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார்.
  • சிறுதானியங்களின் பயன்கள் குறித்து தன்னுடனும் தனது கணவர் கௌரவ் ஷாவுடனும் இணைந்து “அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்” என்ற தலைப்பில் பிரதமர் மோடி ஒரு பாடலை எழுதியுள்ளதாக பாடகி ஃபாலு தெரிவித்துள்ளார்.
  • ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதப்பட்டுள்ள அந்தப் பாடல் அனைவரும் கேட்கும் வகையில் ஒலிப்பரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
  • உலக மக்களின் பசியைப் போக்க சிறுதானியங்கள் ஆற்றும் பங்க குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பு:

  • சர்வதேச சிறுதானிய ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்று 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்தது.
  • சிந்து சமவெளி நாகரிகத்தில் சிறுதானியங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
Next வரலாறு >

People also Read