Tag: நினைவுச்சின்னம் – பலிதான் ஸ்தம்பம்

அறிவியல்

விண்வெளி இந்தியாவின் மூன்றாவது நிலவு ஆய்வு பணி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் – 2 லேண்டர் மற்றும் ரோவரின் பெயர்களை சந்திரயான்-3 க்கு தக்கவைக்க திட்டமிட்டுள்ளது என்று விண்வெளி நிறுவனத்தின் தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார். சந்திரயான்-3 லேண்டர் “விக்ரம்” (இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவாக) மற்றும் ரோவர், ”பிரக்யான்” என்ற பெயரைக் கொண்டிருக்கும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து LVM3 (முன்னாள் GSLV Mk-III)  ராக்கெட்டில் மூன்றாவது நிலவு பயணத்தை தொடங்குவதற்கான ISROவின் திட்டங்களை திரு.சோமநாத் அறிவித்திருந்தார். அறிவியல் சோதனைகள் லேண்டரில் இருக்கும் நான்கு உபகரணங்கள் -ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர் (RAMBHA), சந்திரனின் மேற்பரப்பு தெர்மோ இயற்பியல் சோதனை (chaSTE), சந்திர நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவி (ILSA) மற்றும் லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே (LRA). ஆறு சக்கர ரோவரில் இருக்கும் இரண்டு உபகரணங்கள் – ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) மற்றும் லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS). இதை தவிர, உந்துவிசை தொகுதியில் இருக்கும் ஒரு உபகரணம், ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பளானட் எர்த் (SHAPE). நினைவுச்சின்னம் – பலிதான் ஸ்தம்பம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ”பலிதான் ஸ்தம்பம்” கட்டும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். ”பலிதான் ஸ்தம்பம்” பற்றி ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த பலிதான் ஸ்தம்பம், இந்த நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த அவர்களின் உயர்ந்த தியாகத்திற்கு மரியாதை செலுத்துகிறது.