அறிவியல்

விண்வெளி

இந்தியாவின் மூன்றாவது நிலவு ஆய்வு பணி

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் – 2 லேண்டர் மற்றும் ரோவரின் பெயர்களை சந்திரயான்-3 க்கு தக்கவைக்க திட்டமிட்டுள்ளது என்று விண்வெளி நிறுவனத்தின் தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.
  • சந்திரயான்-3 லேண்டர் “விக்ரம்” (இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவாக) மற்றும் ரோவர், ”பிரக்யான்” என்ற பெயரைக் கொண்டிருக்கும்.
  • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து LVM3 (முன்னாள் GSLV Mk-III)  ராக்கெட்டில் மூன்றாவது நிலவு பயணத்தை தொடங்குவதற்கான ISROவின் திட்டங்களை திரு.சோமநாத் அறிவித்திருந்தார்.

அறிவியல் சோதனைகள்

  • லேண்டரில் இருக்கும் நான்கு உபகரணங்கள் -ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர் (RAMBHA), சந்திரனின் மேற்பரப்பு தெர்மோ இயற்பியல் சோதனை (chaSTE), சந்திர நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவி (ILSA) மற்றும் லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே (LRA).
  • ஆறு சக்கர ரோவரில் இருக்கும் இரண்டு உபகரணங்கள் – ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) மற்றும் லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS).
  • இதை தவிர, உந்துவிசை தொகுதியில் இருக்கும் ஒரு உபகரணம், ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹாபிடபிள் பளானட் எர்த் (SHAPE).

நினைவுச்சின்னம் – பலிதான் ஸ்தம்பம்

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ”பலிதான் ஸ்தம்பம்” கட்டும் பணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

”பலிதான் ஸ்தம்பம்” பற்றி

  • ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
  • தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
  • இந்த பலிதான் ஸ்தம்பம், இந்த நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த அவர்களின் உயர்ந்த தியாகத்திற்கு மரியாதை செலுத்துகிறது.
Next அறிவியல் >