Tag: நார்வே நாட்டவர்கள் மலையேற்றத்தில் உலக சாதனை

வரலாறு

முக்கிய தினங்கள் உலக கல்லீரல் அழற்சி தினம் - ஜூலை 28  ஹெபடைடிஸ் B வைரஸைக் கண்டுபிடித்த நோபல் விருதாளர் டாக்டர் பாரூக் ப்ளம்பெர்க்கின் பிறந்த நாள் உலக கல்லீரல் அழற்சி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 2023 கருப்பொருள்-"ஒரு வாழ்க்கை, ஒரு கல்லீரல்" (One Life. One Liver). நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 3.3, வைரஸ் ஹெபடைடிஸை 2030-க்குள் முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு கோப்பையுடன் பொம்மன், பெள்ளி... நீலகிரி மாவட்டம் குண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையுடன் யானைப் பாகன் பொம்மன் மற்றும் பராமரிப்பாளர் பெள்ளி.  இவர்கள் அங்கம் வகித்து, ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்“ ஆவண திரைப்படத்தில் இடம்பெற்ற யானையை மையப்படுத்தியே சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.  அந்த யானை உருவத்துக்கு ‘பொம்மன்“ என பெயரிடப்பட்டுள்ளது.  நேபாள, நார்வே நாட்டவர்கள் மலையேற்றத்தில் உலக சாதனை 8,000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் 3 மாதங்களுக்குள் ஏறி, நேபாள நாட்டைச் சேர்ந்த டென்ஜென் ஷேர்பாவும், நார்வேயைச் சேர்ந்த கிறிஸ்டின் ஹரிலா என்ற பெண்ணும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர். உலகின் இரண்டாவது உயரமான கே2 மலைச் சிகரத்தை டென்ஜெனும், கிறிஸ்டினும் அடைந்தனர். இதன் மூலம், வெறும் 92 நாள்களுக்குள் அவர்கள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட 14 சிகரங்களில் ஏறியுள்ளனர். இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் 14  உயர் சிகரங்களை எட்டியவர்கள் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளனர். முன்னதாக, அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே மாதம் 2—ஆம் தேதி அடைந்தனர். பின்னர், தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, அன்னப்பூர்ணா, ஜி-1, ஜி-2 உள்ளிட்ட மலைச் சிகரங்களில் அவர்கள் ஏறினர். புத்தகங்களும் எழுத்தாளர்களும் அமிதவ் கோஷின் புதிய புத்தகம் டி.எம். கிருஷ்ணா சென்னையில் அமிதவ் கோஷ் எழுதிய "புகை மற்றும் சாம்பல்: ஓபியத்தின் மறைக்கப்பட்ட வரலாறுகளின் மூலம் எழுத்தாளர்களின் பயணம்" (Smoke and Ashes: A Writers Journey through Opium's Hidden Histories) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.