வரலாறு

முக்கிய தினங்கள்

உலக கல்லீரல் அழற்சி தினம் – ஜூலை 28 

  • ஹெபடைடிஸ் B வைரஸைக் கண்டுபிடித்த நோபல் விருதாளர் டாக்டர் பாரூக் ப்ளம்பெர்க்கின் பிறந்த நாள் உலக கல்லீரல் அழற்சி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2023 கருப்பொருள்“ஒரு வாழ்க்கை, ஒரு கல்லீரல்” (One Life. One Liver).
  • நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 3.3, வைரஸ் ஹெபடைடிஸை 2030-க்குள் முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விளையாட்டு

கோப்பையுடன் பொம்மன், பெள்ளி…

  • நீலகிரி மாவட்டம் குண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையுடன் யானைப் பாகன் பொம்மன் மற்றும் பராமரிப்பாளர் பெள்ளி. 
  • இவர்கள் அங்கம் வகித்து, ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்“ ஆவண திரைப்படத்தில் இடம்பெற்ற யானையை மையப்படுத்தியே சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • அந்த யானை உருவத்துக்கு ‘பொம்மன்“ என பெயரிடப்பட்டுள்ளது. 

நேபாள, நார்வே நாட்டவர்கள் மலையேற்றத்தில் உலக சாதனை

  • 8,000 மீட்டருக்கு மேல் உயரமான 14 சிகரங்களில் 3 மாதங்களுக்குள் ஏறி, நேபாள நாட்டைச் சேர்ந்த டென்ஜென் ஷேர்பாவும், நார்வேயைச் சேர்ந்த கிறிஸ்டின் ஹரிலா என்ற பெண்ணும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
  • உலகின் இரண்டாவது உயரமான கே2 மலைச் சிகரத்தை டென்ஜெனும், கிறிஸ்டினும் அடைந்தனர். இதன் மூலம், வெறும் 92 நாள்களுக்குள் அவர்கள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட 14 சிகரங்களில் ஏறியுள்ளனர்.
  • இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் 14  உயர் சிகரங்களை எட்டியவர்கள் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
  • முன்னதாக, அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே மாதம் 2—ஆம் தேதி அடைந்தனர். பின்னர், தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, அன்னப்பூர்ணா, ஜி-1, ஜி-2 உள்ளிட்ட மலைச் சிகரங்களில் அவர்கள் ஏறினர்.

புத்தகங்களும் எழுத்தாளர்களும்

அமிதவ் கோஷின் புதிய புத்தகம்

  • டி.எம். கிருஷ்ணா சென்னையில் அமிதவ் கோஷ் எழுதிய “புகை மற்றும் சாம்பல்: ஓபியத்தின் மறைக்கப்பட்ட வரலாறுகளின் மூலம் எழுத்தாளர்களின் பயணம்” (Smoke and Ashes: A Writers Journey through Opium’s Hidden Histories) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
Next வரலாறு >