Tag: தேசிய ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு  வாரம் 2023

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு  வாரம் 2023 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்  (CVC) ஒவ்வொரு ஆண்டும் ஊழல் விழிப்புணர்வு கண்காணிப்பு  வாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஒருமைப்பாட்டைப் பரப்புவதில் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கிறது. இது அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை “ஊழலை ஒழிப்போம் ; நாட்டைக் காப்போம்" என்ற கருத்துருவுடன் கொண்டாடப்படுகிறது. CVC பற்றி தொடக்கம் - பிப்ரவரி, 1964 (சந்தானம் கமிட்டி) மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச்  சட்டம், 2003ன் மூலம்  CVC க்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது.பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசு 2023 இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் நந்தினி தாஸ், 2023 ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசை அவரது ‘Courting India: England, Mughal India and the Origins of Empire’ என்ற புத்தகத்திற்காக வென்றுள்ளார். 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் முதல் ஆங்கிலேய தூதர் சர் தாமஸ் ரோ வருகையின் மூலம் பேரரசின் தோற்றம் பற்றிய புதிய கண்ணோட்டத்தை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது. குறிப்பு பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசு, முன்பு நயீஃப் அல்-ரோதன் பரிசு என்று அழைக்கப்பட்டது. இவ்விருது புனைகதை அல்லாத சிறந்த படைப்புகளுக்கு வெகுமதி அளிக்கவும் கௌரவிக்கவும் 2013இல் நிறுவப்பட்டது.