Tag: தேசியத் திட்டங்கள்

தேசியத் திட்டங்கள்

தனித்துவ அடையாள அட்டை  திட்டம்  பின்னணி:  மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சமாக, விவசாய நிலங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1.23 கோடி ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 42.52 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இதுவரை 34.98 லட்சம் விவசாயிகள் (சுமார் 82%) தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனர். இருப்பினும், சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யவில்லை. 2019 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டத்தில் (PM-KISAN), 5 ஏக்கருக்குள் நிலம் கொண்ட 21.57 லட்சம் விவசாயிகள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் தகுதியற்ற நபர்கள் பயனாளிகளாக இடம்பெற்றது கண்டறியப்பட்டதால், பயனாளி அடையாளத்தை துல்லியப்படுத்த தேவையுணரப்பட்டது. மேலும், மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் விவசாயத்துக்கு அப்பாற்பட்டு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது, இதுவும் கட்டுப்பாட்டுத் தேவையை வலுப்படுத்தியது. இதற்காகவே, முன்பே தொடங்கப்பட்ட மண் வளத்திட்டம் உர பயன்பாட்டை சீரமைக்க முயன்றாலும், எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போதைய தனித்துவ அடையாள அட்டை திட்டத்தின் முக்கிய நோக்கம், மானியங்களின் கசிவு  மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்குதல் ஆகும். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN)  பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) என்பது இந்திய அரசின் மத்திய துறை திட்டமாகும்.  இத்திட்டம் பிப்ரவரி 2019-இல் தொடங்கப்பட்டு, டிசம்பர் 1, 2018 முதல் அமல்படுத்தப்பட்டது.  இத்திட்டம், சில விலக்கு அளவுகோல்களுக்கு உட்பட்டு, நாடு முழுவதிலும் உள்ள நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயம், அது சார்ந்த செயல்பாடுகள் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் போன்ற செலவுகளைக் கவனித்துக் கொள்ள நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆண்டுக்கு ₹ 6,000/- மூன்று சம தவணைகளாக தலா ₹ 2,000/- வீதம் (ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச்) நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறை மூலம் செலுத்தப்படுகிறது.